கங்கை யமுனை சங்கமமாகிய மங்கள பூமி அது,
தங்கம் போல் மின்னிய குழந்தை ஒன்று அங்கே பிறக்கிறது,
தன்னைக்காத்திட தனயன் பிறந்தான் என்று பாரதம் மகிழ்கிறது,
தன்னைவிடப்பிறரை அதிகமாக நேசித்து அந்தக் குழந்தை வளர்கிறது.
வளர்ந்தபின் கூடக் குழந்தை மனத்துடன் குழந்தைபோல் சிரிக்கிறது,
குழந்தையோடு குழந்தையாய்க் குழைந்து விளையாடிச் சிரித்து மகிழ்கிறது,
யாரிந்தக் குழந்தை?, வளர்ந்துவிட்ட குழந்தை? உலகமே வியக்கிறது,
பாரதப்பிரதமராய் தரணியே போற்றிட சிறந்து திகழ்கிறது.
தாய்மாமன் பாசத்தை அனைவரிடமும் அது ஒரு போலேக் காட்டுகிறது,
தாய்மாமன் இடத்தினிலே பாரதம் அவனைக் கண்டு சிலிர்க்கிறது,
நேருமாமா என்று நிறைமனதோடே அழைத்து மகிழ்கிறது,
அணைத்தும் மகிழ்கிறது.
குழந்தைகளோடு களித்து மகிழ்ந்தவர் பிறந்த தினமானது...
நேருமாமா என்று அழைக்கப்பட்டவர் பிறந்த தினமானது..
இந்தியக் குழந்தைகள் சிறப்பாகக் கொண்டாடும் குழந்தைகள் தினமானது,
இந்திய தேசமே குழந்தைகள் தினத்தினைப் பெருமையோடு கொண்டாடுது,
நேருமாமா பேர் சொல்லிக் கொண்டாடுது.
சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.