Header Ads Widget

Responsive Advertisement

எனதருமை மாணவச் செல்வங்களே - 1



*அ* றிவை நாளும் வளர்க்கவேண்டும் அந்த அறிவால் நீயும் வளரவேண்டும்
வளர்ந்து
அகிலம் போற்ற நீ வாழவேண்டும்.

*ஆ* றுதலாய் பிறருக்கு இருக்கவேண்டும் அந்த ஆறுதலோடு நீ வாழவேண்டும்
வாழ்ந்து
அரும் பெரும் பணிகள் புரியவேண்டும்.

*இ* ந்தியன் என்பதில் பெருமை வேண்டும்
மேலும் பெருமையை நீயும் சேர்க்கவேண்டும்
சேர்த்து
தேசம் வளர நீ உதவ வேண்டும்.

*ஈ* ன்ற பொழுதிற் பெரிதுவக்கும் பிள்ளையாய் நீயும் மாறவேண்டும்
மாறிப்
பெற்றோர் மனம்குளிர உயரவேண்டும்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*