படிக்கச் சொன்னது தவறா? படித்து முடிக்கச் சொன்னது தவறா?
எழுதச் சொன்னது தவறா? அதை அழுந்தச் சொன்னது தவறா?
பண்பைச் சொன்னது தவறா? இல்லை அன்பாய்ச் சொன்னது தவறா?
ஒழுக்கத்தைச் சொன்னது தவறா? இல்லை
சிந்திக்கச் சொன்னது தவறா?
எது தான் தவறென்று தெரியாமலே இங்கு குழம்பித்தான் நிற்கிறது ஓர் உள்ளம்.
தவறை மறைக்க, தவறாய்ச் சொல்லி, தவறு செய்யத் தூண்டியது யாரோ?
பிஞ்சு மனத்தில் நஞ்சைக் கலந்து வஞ்சம் தீர்க்க வைத்தது எதுவோ?
நாளைய தலைமுறை நாசமாய்ப் போக சமுதாயம் செய்யும் சதிதான் இதுவோ?
கண்டிப்பைக் காட்டுவோர் தண்டிக்கப் படுகின்ற
அவலத்தை ஊக்குவிப்பது இனியும் தகுமோ?
சில அரசியல்வாதிகள் நெறிகெட்டு அலைய ஆசிரியர்கள் தான் என்றும் பலியோ?
என்று விடியும் என்றே நொடியும் கலங்கி நிற்பதுதான் இங்கு எம் விதியோ?
கலங்க வைப்பது சரியோ?சரியோ?
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?
என்று விடியும் இந்த அடிமைகள் வாழ்வும்?
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*