Header Ads Widget

Responsive Advertisement

மறக்கமுடியாத மருதுபாண்டியர்



சிவகங்கைச்சீமையின்
இருவிழிகள் இவர்கள்!
மண்ணையும் மக்களையும் இமையெனக் காத்தனர்!
பரங்கியர் தாக்கத்தை இரட்டைச் சிங்கமென எதிர்த்தனர்!
மக்களின் போற்றுதலுக்குரிய
நடமாடும் தெய்வங்களாய்த் திகழ்ந்தனர்!
அண்ணன்தம்பி ஒற்றுமையில் தலைசிறந்து விளங்கினர்!
திடும்திடும் என
ஆங்கிலேயர் போரிட
விடோம்விடோம் என மருதிருவர் எதிர்த்திட
சடார்சடார் என
பரங்கியர் படையெடுக்க
தடால்தடால் என
மருதிருவர் முறியடிக்க
கதிகலங்கி பொறிகலங்கி விழிபிதுங்கி வெல்லும் வழிதெரியாமல்
கெட்டலைந்தப் பரங்கியர்
மண்ணை அழித்திடுவோம்!
காளையார் கோயிலை தகர்த்திடுவோம்!என்ற வெள்ளையரின்
அராஜகம் கண்ட
வீரச்சகோதரர்
மக்கள் நலன்காக்க
வெள்ளையன் முன்நிற்க
சமயம் வாய்த்ததென்று
கோணல்மதி படைத்த பரங்கித்தலையர்கள்
சதிசெய்து ஈனத்தனமாய்
வஞ்சகமாய்
மருதுபாண்டியரை
தூக்குக்கயிற்றில்
தொங்கவிட்டனர்!
உடல்விட்டு ஆவிபோனதென்று
மகிழ்ந்தனர் பாவிகள்!
மண்ணுக்காய் மாந்தருக்காய் இன்னுயிர்நீத்த
இருவரின்புகழ்
காலங்கள் கடந்தாலும் நம்மனங்களில்
அழியாதக் கோலமாய் நிலைபெற்ற கதை
தெரியாத பாவிகள்!

த.ஹேமாவதி
கோளூர்