Header Ads Widget

Responsive Advertisement

ஔகாரம் பேசுவோமா?



தமிழின் உயிராம் பன்னிரு எழுத்துள்
கடைசியாய் வருவது ஔகாரம்!
ஔவும் மெய்யும் சேர்ந்தால் அழகிய
வார்த்தை உருவாகும்!
கௌரவம் அனைவரும் எதிர்பார்ப்பதாகும்!
சௌகர்யமோ எவரும் முதலில் விரும்புவதாகும்!
பெளவம் என்பது கடலாகும்! பௌவத்தின் ஆழ்பகுதியோ சலனமற்ற மௌனம் ஆகும்!
யௌவனம் என்பதோ இளம்பருவமாகும்!
யௌவனத்தில் யாவுமே மிக அழகாகும்!
மௌனத்தின் ஆளுகைக்கு உட்படும் யௌவனம் ஒருநாளும் சோடைபோனதில்லை!              ஔவை என்றால் அறிவில் முதிர்ந்தவள்!
பௌத்தம் என்பது
கௌதமன் காட்டிய பாதையாகும்!
பௌத்ரம் என்றால் புனிதமானதாகும்!
மௌனம் பௌத்ரமானதென்றாலும்
சிலசமயம் தடைகளை எதிர்க்க கனல்தெறிக்கும் ரௌத்திரமும் தேவைப்படும் வாழ்விலே!

த.ஹே
கோளூர்