இறைவனுக்கு சூட்டுவது பொன்னகை
பெண்ணுக்குத் தேவை புன்னகை
யானைக்குப் பலம் தும்பிக்கை
மனிதனுக்கு வேண்டும் நம்பிக்கை
பறவைக்கு இருப்பது இறக்கை
காலையில் கரைவது காக்கை
மயில் விரிப்பது தோகை
மகாராணியை சுமப்பது சிவிகை
அரிசியை பிரிக்க உலக்கை
கணக்கை தீர்க்க மடக்கை
உண்பதற்கு ஓர் வலக்கை
மூப்பினால் வருவது வழுக்கை
சாமிக்கு அடிப்பது உடுக்கை
மானம் காப்பது உடுக்கை
மேகத்தில் இருப்பது புகை
கோபத்தில் வருவது பகை
தலையில் இருப்பது சிகை
சிங்கம் இருப்பது குகை
ஊமையின் மொழி சைகை
தமிழ்நாட்டில் ஓடுவது வைகை
பெண்ணின் மறுபெயர் தோகை
இரத்தம் குறைந்தால் சோகை
குழந்தைக்கு இருப்பது பொக்கை
நாம் ரசிப்பது அதனழகை
தி.பத்மாசினி