Header Ads Widget

Responsive Advertisement

இரும்பு மனிதர் (மனுசி!) - வத்சலா


அடிமைத்தனம் செய்வார்
ஆண்களே உயர்வென்பார்!
துடியிடை உனக்குஎன்பார்
துடிக்க வைத்தே களித்திடுவார்!
தூங்காதே இனி நீயும்.....
எண்ணத்தின் பலம் கொண்டு
எழும்பி நில் இரும்பு மனுசியாய்!
கண்ணையசைப்பதை நிறுத்து
காமப்பார்வை அதுஎன்பார் புல்லர்!
நேர்கொண்ட பார்வையுடன் துரத்து
நோஞ்சான் மனம் கொண்டவர்
பஞ்சாய்ப் பறந்திடுவார்!
துக்கப்படாதே இனி நீயும் ....
எழும்பி நில் இரும்பு மனுசியாய்!
கறிகாய் வெட்டி சமைத்துப்
பறிமாறியதெல்லாம் போதும்!
விண்ணிலேறி விண்மீன்களைக்
கணக்கெடுக்க வாய்ப்புவந்திடில்
சுணக்கம் காட்டாது ஆயத்தமாகு!
சுருண்டு கிடக்காதே இனி நீயும்....
எழும்பி நில் இரும்பு மனுசியாய்!
அவதாரமே நீ எடுத்து வந்தாலும்....
அக்கினிக்குள் புக வைப்பார்!
அக்கினியின் சுவையை புகுந்து
அவருணர புதிய கீதை நீயும் படை!
அழுது கோண்டிராதே இனிநீயும்....
எழும்பிநில் இரும்பு மனுசியாய்!
இன்றைக்கு மட்டுமல்ல
என்றைக்கும் உன் தினமே!
தந்து விட்டான் அத்தினமே
கொன்றைவார்குழல் சடையன்
குழலிக்கும் தன் பாதியுடலே!
குழம்பிக்கொண்டிராதே இனி நீயும்...
எழும்பி நில் இரும்பு மனுசியாய்!
வேதமுரைஉரிமை உனக்கில்லையென
வேதாந்தம் பேசி நிற்பார்!
நான்மறைக்கும் நானேபிள்ளை என்பர்!
பேதமதைப் ஓட்டிவிட்டுச்சொல்,...
வாயொன்றே போதும் பரமனை
பாட்டிசைத்தே தோத்தரிக்க என்றே!
பதறிப்போய் தவிக்காதேஇனி நீயும்...
எழும்பி நில் இரும்பு மனுசியாய்!
🌹🌹வத்சலா🌹🌹