Now Online

Wednesday, 24 June 2020

கண்ணதாசன் காவியநாயகன்!"க"ல்லறையில் நீ உறங்கினாலும்

"கா"வியம்படைத்த உமது
வரிகளே!

"கி"ண்ணத்தில் ஊறிய மதுரமாய்

"கீ"ற்றொளியாய் கீதம் பாடுமே
அன்றும் இன்றும் என்றுமே!

"கு"றுநகையை வர்ணிப்பதிலிருந்து

"கூ"டிக்கலைந்திடும் கூட்டம்வரை
உமது படைப்பாற்றல்
ஆகா!

"கெ"டுதலையும்

"கே"ட்காமலே கொடுப்போரின்
 நிலையையும்

"கை"வண்ணத்தில்
கொட்டும் மழைத்துளியாய்

"கோ"டிட்டுக்காட்டிய புரட்சி நாயகனே நீ!

"கௌ"தமரின் பற்றற்ற 
ஆசையில்லா வாழ்வையும்
படம்பிடித்துக்காட்டிய பண்பாளரே!

மதுவையும் மாதுவையும்

பேதைமைத்தனத்தையும்
 போதைத்தனத்தையும்

காதலையும் மோதலையும் 
கவிச்சாறில் ஊறவைத்துத் தந்த
காவியமே!

உன்புகழ் என்றும் அழியாது!
எழுத்துகள் இதயத்தில் இதமாகி
ஏக்கமும்தூக்கமும் பதமாகி
எப்போதுமே  தாக்கத்தை உருவாக்கும்
உமது வரிகள் 
இதயத்திலிருந்து உதயமே!

பஞ்சமில்லா வரிகளை
நெஞ்சத்தில் சுமக்கிறேன்!
வஞ்சமில்லா வார்த்தைகளை
கஞ்சமில்லாது சுவைக்கிறேன்!

இவண்
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.

கொரோனா! கொரோனா! கொரோனா!


நெருப்புக் கனவுகள்
கனவே இல்லா மாந்தன் என்று
யாரும் இல்லை உலகினிலே!

கனவில் காணும் யாவும் வாழ்வில்
நனவாய் ஆகும் என்பதில்லை!

உனது கனவும் எனது கனவும் ஒன்றாய் என்றும் இருந்ததில்லை!

நனவும் கனவும் ஒன்றாய் இருந்தால்
நலமாய் வாழ்வு 
நகர்ந்திடுமே!......(1)

துயிலும் போதும் கனவு வரும்
துயிலா போதும்
கனவுவரும்!

உயர்ந்த குறிக்கோள் கொண்டோர்க் கென்றும்
கனவும் நனவும் ஒன்றாகும்!

கயலைக் கௌவும் கொக்கின் கவனம்
கனவில் மாந்தன் கொள்ளவேண்டும்!

உயர்ந்த எண்ணம் கனவாய் அமைந்தால்
அணையா நெருப்பாய்  எரியவேண்டும்!...(2)

மழலை வயதில் தாய்ப்பால் கனவு
தவழும் வயதில்
தரைக்கனவு!

செழித்த பருவந் தன்னில் காணும்
கனவு எல்லாம்
வண்ணமயம்!

விழியால் கலந்த ஆணும் பெண்ணும்
காணும் கனவு
காதலன்றோ?

அழிந்து போன இளமை  எல்லாம்
கனவாய் மீளும்
முதுமையிலே!...…(3)

உயர்ந்த இலக்கு கனவாய்க் கொண்டு
அதனை அடைய பாடுபடு!

தயக்கம் கலக்கம்  தடையாய் வேண்டாம்
இயலும் முடியும் என்றேநினை!

முயலும் போதில் தடைகள் வரலாம்
திறமை இருந்தால்
முன்னேறலாம்!

தயிரைச் சுமந்த பெண்ணின் கனவு
வேண்டாம்! காண்போம் கலாம்கனவு!........(4)

த.ஏமாவதி
கோளூர்

திருட்டு எனப்படுவது யாதெனின்


ஏழைக்காய் அளிக்கின்ற இலவசம் அனைத்தையும்
பணம் படைத்தோர் வாங்கியே செல்வது திருட்டு.

உழைக்கவே செய்யாமல் உழைப்பதாய் நடித்து
பலன் பெற்று ஏமாற்றிப் பிழைப்பது திருட்டு.

பெரிய இடத்துப் பெண்களாய் காதல் வலை வீசி
கல்யாண வியாபாரம் செய்வது திருட்டு.

கை நிறையக் காசிருந்தும் பசிக்கிறது என்று சொல்லி
பிச்சை வாங்கி மேலும் மேலும் சேர்ப்பது திருட்டு.

ஊரடங்கி இருக்கையிலே ஊராரின் சொத்துக்களை
உரிமை என்று இரகசியமாய் விற்பது திருட்டு.

கேட்பதற்கு நாதியில்லை என்ற ஒரே காரணத்தால்
எளியோரின் உடமைகளை தனதாக்குவது திருட்டு.

பெற்றோரின் தேவைகளைச் செவி கொடுத்தும் கேளாமல்
அவர் சொத்தை அனுபவித்து வாழ்வது திருட்டு.

தனக்குரியது இல்லை என்பது தெரிந்தும்
தனதாக்கிக் கொள்வது மிகப் பெரிய திருட்டு.

நல்லதே செய்வதாய் நம்ப வைத்து அதன்பிறகு
கெடுதல் செய்யும் நம்பிக்கைத் துரோகமும் திருட்டு.

மன்னிக்கவே முடியாத குற்றம் திருட்டு.

*கிராத்தூரான்*

கண்ணதாசனென்றொரு காவியம்


செம்புலப்பெயல்நீர் போல கலந்தது காதலர் நெஞ்சங்கள் மட்டுமல்ல!எங்கள் நெஞ்சங்களும் உனது திரையிசைப் பாடல்களும்தான்!

வாழ்வின் எந்த அத்தியாயத்தில் நின்றிருந்தாலும் உந்தன் ஏதாவதொரு பாடல் அதனோடு இசைந்துச் சுவையூட்டிவிடுகிறது!

உனது இன்பப் பாடல்கள் எங்கள் இன்பத்தைப் பெருகச் செய்கின்றன!
உனது சோகப் பாடல்களோ எங்கள் சோகங்களைக் காணாமலோடச் செய்கின்றன!

தமிழரின் இருவிழிகளாம் காதலுக்கும் வீரத்திற்கும் உனது
எழுத்துகள் இயற்கைஎருவாகத் திகழ்கின்றன!

உன்விரல்முனையில்
பிறப்பெடுக்கும் முன் உன் சிந்தனைக் கருவறையில் தங்கியவை எல்லாமே இலக்கியமாய்ப் பிறந்துவிட்டாலும்
இன்னும்நீ எங்களுடனே இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு இலக்கியங்கள் கிடைத்திருக்கும்?

கண்ணனுக்குத் தாசன்நீ! ஆனால் அன்றுமுதல் என்றுமே உலகத்தமிழரெல்லாரும்
உனக்கு தாசர்கள்!

கிமு கிபி போல திரைத்துறையில் சொல்வதென்றால்
கமு கபி அதாவது
கண்ணதாசனுக்கு முன்
கண்ணதாசனுக்குப் பின்
உனக்கு ஈடாக  முன்பும் எவருமில்லை! பின்பும் எவரும் இதுவரை பிறக்கவில்லை!

யுகங்கள் கடந்தாலும் எங்கள் இதயங்கள் இழக்காது உங்கள் நினைவுகளையும்
இனியபாடல்களையும்!
இரவின் நிலவின்மடியில்
மொட்டைமாடியில்
படுத்திருப்போரின் செவிகளிலே உன்திரையிசைப் பாடல்கள் மெலிதாகக் கேட்கவேண்டும்!ஆகா! இதைவிட சொர்க்கமென்று தனியாக வேண்டுமா என்ன?

த.ஹேமாவதி
கோளூர்

புரியாத புதிர்உயிருக்கும் உணர்வுகளுக்கும்
இடையே நடக்கும்
இடையறாத உலகப்போர்!
இரவில் சூரியன் சுட்டெரிப்பதும்...!
பகலில் நிலவு குளிரவைப்பதுமான
குருசேத்திர யுத்தம்.......!
இதில் மட்டுமே சாத்தியம்!
புவியில் வலியோருக்கு. சொர்க்கம் அளித்து வெல்லவும்....
எளியோர் வாழ்வை நரகமாக்கி
கொல்லவும் *இதற்கு* மட்டுமே
தெளிவாய்த் தெரியும்!
உறக்கம் தொலைத்து
கனவைத் தேடவும்.......!
இதயம் தொலைத்து
உணர்வுகளோடு வாழவும்....!
கற்றுத்தரும் மரண குருவாகும்!
உளரல்களையும் இசையாய் வடிக்கும்
மந்திர இசைக்கருவி!
கிறுக்கல்களை கவிதையாய்
வடித்துத்தரும் மாயஎழுத்தாணி!
மௌனங்களுக்கு ஒலிதந்தும்.....
வார்த்தையொலிகளை
மௌனமாக்கும் மாயாவி இது!
சண்டைகளையும் சமயத்தில் ....
முத்தத்தில் முடித்து வைத்து
மோதல்களின்றியே இதயம்
உடைக்கும் மாய சுத்தியல்!
நெஞ்சம் கொஞ்சம் சிறகடித்துப்
பறக்கும்போதே இதயத்தைக்
கொன்று வீழ்த்தும் மாயவித்தை!
தன்னந்தனியே சிரிக்கவைத்து....
தனிமையிலே க (சி)தறவைக்கும்
மாயம் ஒளித்த ஔதடம்!
இதனது பூகோளப்பாடத்தில்.....
எப்போதும் பூமி மேலாகவும்
வானம் கீழாகவும்.......!
வரையறை செய்யப்பட்டிருக்கும்!
இதுபோன்ற இன்பமும் இல்லை!
இதுபோன்ற துன்பமும் இல்லை!
இந்தப் புரியாத புதிரின் பெயர்தான்...
*வாழ்க்கை*.                          
🌹🌹வத்சலா🌹🌹

கவிதைக்குக் கவிதை


முத்தான வார்த்தைகளால் சத்தான கருத்துரைத்து
எத்தனையோ உள்ளங்களை உந்தன் பால் கவர்ந்திழுப்பாய்.

மையேந்திய விழி போலப் பொய்யேந்தி நின்றாலும்
மெய்யுருகி நிற்க வைத்துக் கைதட்டி இரசிக்க வைப்பாய்.

உள் மனதின் ஓசைகளை கள்ளமின்றி எடுத்துரைத்துக் 
கள்ளமனம் கொண்டவரைக் கண்முன்னே நிற்கவைப்பாய்.

கற்பனையில் நீராடி சொற்பனையில் நீ ஏறி
அற்புதமாம் பதனீரின் அருஞ்சுவையை ருசிக்க வைப்பாய்.

இளமையின் துள்ளல்களை முதுமையிலும் நினைக்க வைத்து
இளமையான வாழ்வினிலே மனம் தழைக்கத் துணைத்து நிற்பாய்.

கண்ணுக்குள் நீ நுழைந்து மூளைக்குள் ஊடுருவி
நெஞ்சத்தை நிறைய வைத்து கொஞ்சிக் கொஞ்சி மகிழவைப்பாய்.

நாலு வார்த்தையில் சுருக்கென்றும்
நாலடியில் நறுக்கென்றும்
பெருவரியில் சிறப்போடும்
சிந்தையைத் தூண்டி நிற்பாய்.

சோகத்தில் நனைகையிலும் சுகம் பகிர்ந்து சிரிக்கையிலும்
வேகத்தை உணரவைத்து யாகத்தை நிறைவு செய்வாய்.

கவிதையே உனக்கு ஒரு கவி புனைய முனைகையிலே
அருவி போல நீ குதித்து ஆரவாரம் செய்திடுவாய்.

பனி மழையில் குளிரவிட்டு தனியழகில் மயங்கவிட்டு
மயங்குவதை நீ இரசித்து மோகினியாய் மிளிர்ந்திடுவாய்...... 

மோக வலையில் மாட்டி விடுவாய்.

*கிராத்தூரான்*

யாரோ அழைத்தது போல்யாரோ என் பேர் சொல்லி
அழைத்தது போல ஒரு உணர்வு....!
என் மனம் பச்சைக்குழதையாய்
அடம்பிடித்தே திரும்பியது !

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காணவில்லை நான் எவரையும்....!
எதிர்பார்ப்பின் தோல்வியில்
விழிப்பௌர்ணமிகள் கரைந்தன!

காற்றிடம் விசாரித்தேன் அதுவும்
வெற்றிடமானதே உயிர் விழுங்கி..!
நீள் வான எல்லைவரை நோக்க சட்டென முளைத்ததே அமாவாசை!

வானவில்லின் ஏழுவண்ணங்களை
வரிசைமுறையில் பிரித்த போதும்......
 நிறங்கள்மாறுபட்ட போதும் அவை 
தந்த ஒரே விடை என்னை    *அழைத்தது காதலாம்*!

புல்மீது தூங்கும் பனித்துளியூடாக
நுழைந்து வந்த வண்ணத்துப்பூச்சி
தன் பட்டுச்சிறகு உலர்த்தியவாறே
தந்த விடையிலும் பூத்தது காதல்!

காமப்போர்வைப் போர்த்தி 
வருவது அல்லவாம் காதல்!
காலம் போற்றும் பதிவுதான்
கள்ளமற்ற குழந்தைபோல் காதல்!

செம்புலப்பெயல் நீராம் காதல்!
செம்மையுரு மனவயலில் அதை
சீருடன் வளர்த்து பயிராக்க
நேரிய வழி பல காண்போம்!
யாருக்கு தெரியும் என்னை
அழைத்திட்ட காதலின் குரல்
அழைக்கலாம் எவரையும்......
எந்தகணத்திலும் இயற்கையின்
இமை ஒளிரும் சிரிப்பிலும்.....!

🌹🌹வத்சலா🌹🌹

Sunday, 21 June 2020

ஆதவனை மறைத்தவள்


ஆதவனின் ஒளியெடுத்து அதையே தான் பிரதிபலித்து
இரவினிலே ஒளிகொடுத்து இதயங்களைக் கவர்பவளே

கணவனில்லா வேளையிலே தன் பொறுப்பை உடன் உணர்ந்து
குடி காக்கும் கடமை செய்யும்
பெண்களைப் போல் ஒளிர்பவளே

இரவினிலே மட்டுமன்றிப் பகலினிலும் உன் இருப்பைக்
காட்டிவிட ஓரிருநாள் கதிரவனை மறைப்பவளே 

ஆதவனை நீ அணைக்க அணைப்பினிலே அவன் அணைய 
ஒரு பகுதியில் மட்டும் ஓரமாய் முகம் தெரிகிறதா

மாதவனின் அருளோடு ஆதவனின் அருளொளியும் மேதினியில் இல்லையென்றால் காசினியின் கதி என்ன.

ஆதவனை அணைத்தவளே மகாதேவன் சிரத்தவளே
நிலமகளுக்குன் சக்தி காட்டிவிட்டாய் நிலாமகளே

வழியில் நின்று மாறிவிடு ஆதவனை ஒளிரவிடு
ஆதவனின் கிரணத்தை பூமியிலே தவழவிடு

ஞாயிறுக்கு வழிவிடு ஞாலத்தை வாழவிடு.

*கிராத்தூரான்*

உலக அகதிகள் நாள் 20-06-2020பிறந்த நாட்டை, பிறந்த ஊரை, பிறந்த வீட்டை விட்டு விட்டு
உடனிருந்தோரை, உறவாயிருந்தோரைப் பிரிய முடியாமல் பிரிந்து விட்டு
எல்லைகள் கடந்து, தொல்லைகள் கடந்து, தண்ணீரில் மிதந்து, கண்ணீரில் நனைந்து
சிரத்திலும் மனத்திலும் பாரத்தைச் சுமந்து
உயிரையே நினைத்து உடமைகள் தொலைத்து
என்றாவது ஒருநாள் ஒன்றாகி விடுவோம் என்று நம்பி வாழும் வெளிநாட்டு அகதிகள்.

சொந்த நாட்டிலே, சொந்த ஊரிலே, வெந்து மாளாமல், நொந்து போகாமல்
தீவிரவாதத்தின் தீவிரம் தாளாமல்
ஊர்விட்டு ஊர்சென்று உயிர்காத்து வாழ்கையில்
கொடுமைகளை நினைத்து இரவிலும் தூங்காமல்
தூக்கத்தில் கூடப் பதறியே எழுகின்ற 
நினைக்கையில் பயத்தினில் கதறியே அழுகின்ற
என்றுதான் அன்றுபோல் இன்புற்று வாழ்வோம்
என்றெண்ணிக் கலங்கும் சொந்த நாட்டின் அகதிகள்.

உரிமைகள் இழந்தவர், உடமைகள் தொலைத்தவர்
மறுநாட்டில் அடிமைபோல் வாழ்க்கையை வாழ்பவர்
வழிவேறு இல்லாமல் அகதியாய் வசிப்பவர்
தன் நாட்டு வாழ்க்கைக்காய் ஏங்கியே தவிப்பவர் 
தன்நாடு செல்கின்ற நாளும் தான் எந்நாளோ
நல்வாழ்வு வாழ்கின்ற நாளும் தான் எந்நாளோ
அகதிகளே இல்லாத நாளும் தான் எந்நாளோ
பொன்நாளாய் அந்நாள் இவ் வுலகினிலே மலரட்டும்
அந்நாளே உலக அமைதி நாளாக மாறட்டும்.

*கிராத்தூரான்

மர(ன)ங்கொத்தி பறவை


     
உன் மனதை நான் கொத்த
என் மனதை நீ கொத்த
மரங்கொத்திப் பறவைகளாய் ஆனோம் நாமே!
கொத்திய என்மனதை நீயெடுத்துக் கொண்டாய்!
உன்மனதைக் கொத்தியெடுத்துக் கொண்டேன் நானும்!
மனங்களின் இடப்பெயர்வால்      நீ இங்கே நான் அங்கே!
சங்கமம்தானெங்கே?
மதத்தாலும் மொழியாலும் பெற்றோரால் பிரிக்கப் பட்டோம்!
மாறிய மனங்கள் அவரவரிடத்தே வந்துசேராதது அவர்கள் அறியாதது!
மெல்லமெல்ல காத்திருப்போம்!
மாற்றம் வரும்!
காத்திருத்தல் சுமையானதென்றாலும்
ஏற்றதொரு நாளிலே நல்லபதில் வரும்!
காத்திருக்கும் வேளையிலே என்நினைவெல்லாம்
உன்மனதைக் கொத்தும் மரங்கொத்தியாய்!
உன்நினைவெல்லாம்
என்மனதைக் கொத்தும் மரங்கொத்தியாய்!

த.ஹேமாவதி
கோளூர்

வீரம் விளைந்த தேசம்


அன்புக்கு நான் என்றும் அடிமை என்று உணரவைத்து
அமைதிக்கே முதலிடம் என்று சொல்லும் என் தேசம்
எல்லையற்ற தொல்லைகளை எல்லையில்சந் தித்தாலும்
நட்புக்குக் கைநீட்டும் தேசம்தான் என் தேசம்.

வீணாக என்றுமே சண்டைக்குச் சென்றதில்லை
சண்டையென்று வந்துவிட்டால் பின்நோக்கிப் பழக்கமில்லை
கல்லாலே அடித்தாலும் தடிகொண்டு தாக்கினாலும்
கோடையிடி போல் பாய்ந்து அழிக்காமல் விடுவதில்லை.

பனிமலையின் உச்சியிலே  பணிசெய்யச் சென்றவர்கள்
பாரதத்தின் பாதுகாப்பைக் கவனிக்கச் சென்றவர்கள்
பதிலுக்குப் பதில் கொடுத்து பலபேரின் உயிரெடுத்து  
தன்னுயிரை ஈந்து இன்று தியாகியாகி நிற்கிறார்கள்.

வீரர்கள் செய்த தியாகம் வீணாகிப் போகுமென்று
சீனத்துத் துரோகிகளே சிறிது கூட நினைக்காதீர்
ஓரடி நிலம் கூட ஆக்கிரமிக்க நினைத்தாலும்
ஒருபிடி மண் உனது பிணத்தில் இதை மறக்காதீர். 

வெறிகொண்ட வேங்கையாக பலி வாங்கக் காத்திருக்கும்
பாரதத்தின் வீரர்களே பாரதம் உன் பின்னாலே.
மோதி அழித்துவிடு ஒன்றுக்குப் பத்து என்று
சாந்தி அடையட்டும் தியாகிகளின் ஆத்மாக்கள்

ஓங்கி ஒலிக்கட்டும் வெற்றியின் கோஷங்கள்
ஓயாது ஒலிக்கட்டும் வெற்றியின் கோஷங்கள்.

*கிராத்தூரான்*

வாழ்வோம் வாழ வைப்போம்!


வாழவே பிறந்தோம் வாகாய் நாமே!
..........வாழும் விதங்கள் அறிவோம் வாரீர்!

வாழ்வில் ஒருவிதம் சுயநல வாழ்வு!
.........வாயிற் கதவை
அடைத்தே வாழ்தல்!

பாழும் பணத்தைப் பூட்டி வைத்து
.........பாரில் யார்க்கும் உதவா வாழ்க்கை!

வீழ்ந்த போதில் உதவிய பேர்க்கு
........வாழும் போது உதவுதல் மறுவகை!
(1)

உதவிடும் பேர்க்கே உதவுதல் என்பது
.........உணர்ந்திடு அதுதான்வாணிப வாழ்க்கை!

இதயமில்லா மாந்தன் வாழ்வோ எட்டி!
........எட்டிம ரம்கனிந் தாலும் பயனென்?

பதறியே வறியோர்க் குதவி வாழ்தல்
.........பிறர்நலம் விரும்பும் மாந்தரின் வாழ்க்கை!

உதவியால் பிறரின் இன்னல் தீர்த்தல்
........உலகில் அதுதான் உன்னத வாழ்க்கை!
(2)

தன்னை இழந்து பிறர்க்காய் உதவும்
.......தியாக வாழ்வை வாழை உணர்த்தும்!

தனக்காய் மட்டுமே வாழ்தல் வேண்டா!
........தணிவாய்ப் பிறர்க்காய் வாழ்வதே வாழ்க்கை!

தனியொரு மாந்தன்  தனித்து நின்றிட
........துணையாய் இன்றி ஏணியாய் நின்றிடு!

தனது சொந்த காலில் அவன் நின்றிட
.........தெம்பினை ஊட்டி வழிதனைக் காட்டு!
(3)

மீனைத் தராதே வலையினை வீசி
...........மீனினைப் பிடிக்கும் தொழிலைச் சொல்லிடு!

தேனைத் தராதே! தேனீ வளர்த்து
..........தானே தேனைப் பெற்று வாழவை!  

 உன்னால் வாழ்ந்தேன் என்றே அவனை
.......உன்செயல் சொல்ல வைப்பதே வாழ்க்கை! 

என்றும் எவர்க்கும் ஏணியாய் இருப்போம்!
..........எவர்க்கும் வாழ்வில் ஒளியாய் இருப்போம்!

த.ஹேமாவதி
கோளூர்

கண்ணுபடப் போகுதம்மா

கையேந்தி வாழாமல் கைத்தொழிலின் துணைகொண்டு
மெய்வருத்தி உழைக்கின்ற உழைப்பு தந்த சிரிப்பா?

பொய்யான மனிதர்களின் பொய்மொழியில் மயங்காமல் 
மெய்யாக நீ நடக்கும் நேர்மை தந்த களிப்பா?

முத்தான பிள்ளைகள் தப்பாது வளர்ந்து விட்டால்
சத்தான வாழ்வு வரும் நம்பிக்கை மகிழ்வா?

காத்திருந்து பார்த்திருந்த கைப்பிடித்த கணவனை நீ 
பத்து நாள் கடந்தபின்னே கண்டுவிட்ட நெகிழ்வா?

அத்தனை மகிழ்ச்சியையும் முத்துப்பல் வெளித்தெரிய
இத்தனை அழகாக வெளிப்படுத்தி விட்டாயே!

கண்ணுபடப் போகுதம்மா புண்ணிய வதியே உனக்கு 
'சுத்திப்போடு நீ உடனே' இது மூத்தோர் வாக்கு.

*கிராத்தூரான்

சிலருக்கு சிலேடை தான் இந்த வெட்டு கிளிகள்.....


எங்கும் பாதிப்பு.
வெட்டு 
கிளிகளால் .....

இந்த
வெட்டுகிளிகளின்
கெடு புத்தியே
உழைப்பை சிதைப்பதுதான் .....

வெட்டு கிளிகளுக்கு
அலாதி சந்தோஷம்,
கோஷம் போட்டு
பயிர்களை 
நாசம் செய்வதில் .....

அழகு 
பறவைகளை
வேட்டையாடிய 
மனித நேயர்களே ,
வெட்டுக் கிளிகளை 
உங்களால் வேட்டையாட
முடியாது .
அதற்கும்
அந்த பறவை
கூட்டத்தின் 
பார்வைகள் பட வேண்டும் .....

எந்த
வெட்டு கிளிகளுக்கும்
கூடுகட்ட தெரிவதில்லை ...

எந்த
வெட்டு கிளிகளும்
விதை பரப்பி
வி ரு ட் ச கம் காணுவதில்லை...

எந்த
வெட்டு கிளிகளுக்கும்
உணவை சேமிக்கு பழக்கமில்லை .....

எந்த
வெட்டு கிளிகளுக்கும்
ஒற்றுமை உணர்வு
இருப்பதில்லை .....

இந்த
வெட்டு கிளிகளால்,
உழுபவனின் 
ஒரு போகப் 
பயிரைத் தான் 
சூறையாட முடியும்...

ஒரு போதும்
உழுபவனின் நம்பிக்கையை 
சூறையாடவே முடியாது
அது நடக்கவே நடக்காது .....

ஏய்
வெட்டுக்கிளிகளே,
எங்கள் தேசத்தில்
நீங்கள்
அணிவகுப்பதால்,
ஒரு போதும்
உங்களால்
எங்கள்
தேசிய பறவையாய்
மாறிட முடியாது 
மாற்றிடவும் முடியாது .....

உயிர் வாழ
வயிர் வளர்க்கும்
வெட்டு கிளிகளே,
உணர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் ஆட்டமும்
சில காலம்தான் .....

வெட்டு கிளிகளை
வேட்டையாடுவோம்
வெற்றி கொடியினை
பறக்க விடுவோம் .....

எம் தேசம் வாழ்க.....
( ஜெய் ஹிந்த் )


*முனைவர் கவிஞர் ராஜா ஆ

Monday, 1 June 2020

விதி

என்னை
தண்ணீருக்குள்
தள்ளி விடுங்கள்
என் கண்ணீரை
எவரும் 
கண்டு விடாதிருக்கட்டும் 

என்னை 
பேரிரைச்சலுக்குள் 
இழுத்து போடுங்கள் 
என் காதலனுக்காக 
துடிக்கும் 
என் இதயத்தின்  ஓசை 
எங்கும் பரவாமல்
 போகட்டும் 

என்னை 
இந்திய 
துணைக் கண்டத்தை 
எக்காரணம் கொண்டும் 
தாண்ட விடாதீர் 
என் வறுமைக்கு 
காரணம் விதி 
என்பதாகவே இருக்கட்டும் ..!

விலகிய செல்லும் உறவுகள்கூடி விளையாடிய போதும்,
ஓடி விளையாடிய போதும்,
தெரிவதில்லை உறவுகளும்.....!
அவை சார்ந்த மரபுகளும்......!
உயிர்ச்சங்கிலிகளாய்
உணர்வுகளைப் பிணைக்க.....!
அன்பு மட்டுமேபோதுமாயிருந்தது!
அந்த வட்டத்துக்குள் வந்த
சுயநலச் சூறாவளிகளே
உறவு மாற்றங்களால்
உணர்வு மாற்றங்களைத்
திணித்தே வைத்திட்டன!
அதற்கு காலமும் நேரமும்
மட்டும் அல்லாமல்........
சம்பிரதாயங்களும் சில
சடங்குகளும் கூட்டுச்சேர்ந்து.....
வாகாய் பகடையுருட்ட
தோற்றுப்போன தர்மனாய்
நாம் மட்டும் ஒற்றையிலே....!
வஞ்சம் வாய்ச்சவடால் பேசும்!
அகங்காரம் அந்நியமாக்கும்!
ஆதிக்கமனம் வேறுபாட்டை
                     தூண்டும்!
பொறாமை பொங்குகடலாகும்!
இந்த பகடையாட்டத்தில்
அன்பும் உதாரத்துவமும்
பண்புடன் பாசமும்
யோசிக்கும் கணத்திற்குள்.......
வெட்டுக்காய்களாய்
களபலி காணும்!
உடன் பிறந்தோர் அதனால்
ஒட்டாது போவார்!
தளிர்த்த உண்மைக் காதல்கள்
தணல் மீறிய சாம்பலாகும்!
வைராக்ய விரதங்கள்
வலிக்க வலிக்க அரங்கேறும்!
தேவையின்றி மனபாரங்கள்
அடுத்த தலைமுறைக்கும்
தேவையின்றி கடத்தப்படும்!
ஒன்று கூடும் நேரங்கள்......
ஒப்பனை பூசிய போலிமுகங்களை
வெளிச்சமிட்டுக்காட்டும்!
உடைந்த கண்ணாடிக்கோப்பை
உண்மையில் விரிசல் மூடி
ஒளிர்ந்தே இருப்பினும்
ஓர்குவளை நீருக்குத் தாங்குமோ?
ஆனாலும் ஆன்றோர்
சொல்காக்க குற்றம்
பாராது சுற்றம் கண்டாலும்.......
பட்டென்று வெட்டி விடவே
சில ஒட்டுச்சாறுண்ணிகளின்
பகல் வேசத்தோடு
பல்லிளித்து உறவாடி
தந்து செல்லுமே பிரிவெனும்
கோபச்சதிராட்டம்!
தப்பிக்கும் மார்க்கம் ஒன்றுண்டு
தரணியோரே .....!
தாமரையிலை மேல்
நீர்த்துளியாய் வாழும் வாழ்வே!

🌹🌹வத்சலா🌹🌹

தளிர்கள் பசியறுப்போம்!கண்ணே மணியே சுடர்வீசும்  நான்பெற்ற
......தண்ணிலவே என்றெல்லாம் கொஞ்சிடவே__ ஈன்றெடுத்த
.........அன்னையோ தந்தையோ அற்ற மழலையர் 
........மென்பசிக்குச் சோறிடல் நன்று!
.............................(1)

ஆலயம் சென்றாங்கே ஆண்டவன் மேனியில்
.....பாலூற்றி ஆனந்தம் கொள்வதைக்__
காட்டிலும்
......பாலூட்ட யாருமில்லா பிஞ்சு மழலையர்
....பாலுண்ணச் செய்தல் உயர்வு
...............................(2)

தாய்தந்தை அற்றவர்கள் உண்ணாமல் வாடிநிற்க
......வாய்நிரம்ப உண்டியலில் காசெதற்கு?__தீவினை
போய்விடுமா நல்வினைதான் கூடிடுமா ஏழைகள்
.......வாயெல்லாம் உண்டிடுமா என்ன?
............................(3)

பெருஞ்செல்வம் வேண்டாமே நல்லமனம் போதும்
......அரும்பசிக்கு உன்உணவில் ஓர்உருண்டை__தந்தாலும்
.......போதுமே ஆலயத்தில் காணிக்கைச் செய்வதினும்
........கோதிலா நற்செய லாமே
............................(4)

த.ஹேமாவதி
கோளூர்

தன்னுள் விரிந்த தண்மலர்

   

பாதைகள் நீண்டபடியே போகின்றன
பாதச்சுவடுகளின் பதிவுஏதுமின்றி!
பகல் வெளிச்சத்திலேயே
இருள் கனத்துக்கிடக்கின்றது
இதயமற்ற தனவந்தர் போலே!
கர்ப்பத்தின் குழந்தைகளாக
இன்று கூரைகளைக்குள் மனிதர்...!
எந்த வேதநூல்களும் வகுக்காத
தவங்களை வீட்டின் அறைகள்
இயற்றிக்கொண்டிருக்கின்றன!
இருப்பவர் கதவுகளை மூடிட.....
இல்லாதோர் வயிற்றை மூட
வழியற்று வெறித்த பார்வைகளோடு...!
விளக்குகள் ஏற்றலாம் அதற்கு
விந்தை விளக்கம் கூறலாம்!
கைகளைத் தட்டலாம் அதில்
கைரேகைகளும் மறையலாம்!
ஆலயங்களைச் சாத்தலாம்
ஆண்டவனை வீட்டிற்கழைக்கலாம்!
பள்ளிக்கூடங்களைப் பூட்டலாம்
பாடத்தை கணிணிவழி ஏற்கலாம்!
அறிக்கைகள் ஆயிரம் விடலாம்
ஆனபொழுதின் பயன் என்ன?
கண்ணுக்கே புலப்படாத
கரோனாவே கட்டிக்கொண்டது
புண்ணியம் அனைத்தையும்...!
மனிதம் வாழ செய்யாத பிழையை
இன்று இது செய்கிறதே!
வாழ்க்கையை ரசித்தவரெல்லாம்
வாய்க்கரிசி வாங்கிச்செல்ல
வக்கற்று மண்ணுக்குள் போயினரே!
இருந்துவிட்டுப்போகட்டும்........
ஊர் கூடித்தேர் இழுக்க நாம்
உயர்ந்த கரங்களாவோம்!
இந்நிலையில் ......
நேசிக்கத்தெரிர்தோர் யாவரும்
பேசிக்கொள்ளட்டும்!
அதிகம் பேசுபவர் யாவரும்
மௌனம் காக்கட்டும்!
இந்த இடைவெளியில்......!
என்னில் விரிந்த தண்மலர் *ஞானம்*
அது எனக்குத் தந்த போதனை....
இந்த உலகம் உள்ளவரைமறவாதே
*பசிக்கு முன்னால் புத்தன் கூட
                        ஞானி அல்ல*
🌹🌹வத்சலா🌹🌹

வேடிக்கை மனிதர்கள்அவர் சொன்னார் இவர் சொன்னார்
அதனால் அது சரியென்பார்
அவர் சென்றார் இவர் சென்றார்
அதனால்சென் றேனென்பார்.

தன்னுடைய தலைவன் எதைச் செய்தாலும் புகழ்ந்திடுவார்
அவருடைய எதிரிகளை அனுதினமும் இகழ்ந்திடுவார்.

சரியான செயல்தானா சிந்திக்கத் தவறிடுவார்
சிந்திக்கும் மனிதர்களை நிந்தித்து மகிழ்ந்திடுவார்.

வார்த்தை அலங்காரத்தில் மயங்கி மதி இழந்திடுவார்
செயல்வீரர் களையெல்லாம் செயல்படாது தடுத்திடுவார்.

ஊருக்கு உபதேசம் நிமிர்ந்து நின்று சொல்லிடுவார் 
செயலென்று வரும்போது சொன்ன சொல்லை மறந்திடுவார்.

பிறருக்காய் உழைப்பதாக மேடை போட்டு முழங்கிடுவார்
யாருக்காய் என்று மட்டும் சொல்லாமல் தவிர்த்திடுவார்.

பெயருக்காய் புகழுக்காய் ஊர் உலகம் சுற்றிடுவார் 
தனக்காக இல்லையென்று தவணை முறையில் உரைத்திடுவார்.

பழம்பெருமை தனைச்சொல்லி உயர்ந்தவனாய்க் காட்டிடுவார்
தம் பெருமை நிலைநாட்ட முடியாமல் தோற்றிடுவார் 

ஏழைக்காய் உழைப்பதாக உழைக்காதோர் பசப்பிடுவார் 
உழைக்கின்ற ஏழைகளோ ஏமாந்து நின்றிடுவார்.

நடிப்பவரும், பார்ப்பவரும், இரசிப்பவரும், பழிப்பவரும்
வேடிக்கை மனிதராக இணைந்தபடி தொடர்ந்திடுவர்

வேடிக்கையை வாடிக்கையாய் கூடி நின்று காட்டிடுவர்.

*கிராத்தூரான்*

சிலருக்கு சிலேடை தான் இந்த வெட்டு கிளிகள்.....
எங்கும் பாதிப்பு.
வெட்டு
கிளிகளால் .....

இந்த
வெட்டுகிளிகளின்
கெடு புத்தியே
உழைப்பை சிதைப்பதுதான் .....

வெட்டு கிளிகளுக்கு
அளாதி சந்தோஷம்,
கோஷம் போட்டு
பயிர்களை 
நாசம் செய்வதில் .....

அழகு 
பறவைகளை
வேட்டையாடிய 
மனித நேயர்களே ,
வெட்டுக் கிளிகளை 
உங்களால் வேட்டையாட
முடியாது .
அதற்கும்
அந்த பறவை
கூட்டத்தின் 
பார்வைகள் பட வேண்டும் .....

எந்த
வெட்டு கிளிகளுக்கும்
கூடுகட்ட தெரிவதில்லை ...

எந்த
வெட்டு கிளிகளும்
விதை பரப்பி
வி ரு ட் ச கம் காணுவதில்லை...

எந்த
வெட்டு கிளிகளுக்கும்
உணவை சேமிக்கு பழக்கமில்லை .....

எந்த
வெட்டு கிளிகளுக்கும்
ஒற்றுமை உணர்வு
இருப்பதில்லை .....

இந்த
வெட்டு கிளிகளால்,
உழுபவனின் 
ஒரு போகப் 
பயிரைத் தான் 
சூறையாட முடியும்...

ஒரு போதும்
உழுபவனின் நம்பிக்கையை 
சூறையாடவே முடியாது
அது நடக்கவே நடக்காது .....

ஏய்
வெட்டுக்கிளிகளே,
எங்கள் தேசத்தில்
நீங்கள்
அணிவகுப்பதால்,
ஒரு போதும்
உங்களால்
எங்கள்
தேசிய பறவையாய்
மாறிட முடியாது 
மாற்றிடவும் முடியாது .....

உயிர் வாழ
வயிர் வளர்க்கும்
வெட்டு கிளிகளே,
உணர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் ஆட்டமும்
சில காலம்தான் .....

வெட்டு கிளிகளை
வேட்டையாடுவோம்
வெற்றி கொடியினை
பறக்க விடுவோம் .....

எம் தேசம் வாழ்க.....
( ஜெய் ஹிந்த் )

*அறிவேந்தல்*
*பெரியார் சுடர்*
*முனைவர்*
*கவிஞர் ராஜா ஆ*
*பண்ணுருட்டி*
*NCC OFFICER*
*GHSS PANRUTI*

புகை பிடிக்காதீர் ஹைக்கூ

புகையிலை எதிர்ப்பு நாள் மே 31

வாயில் நெருப்பு.
இருண்டது வாழ்க்கை,
சிகரெட் .....

போதை
காட்டும் பாதை ,
மரண குழி .....

அற்புத வாழ்வை
அற்ப வாழ்வாக்கும் ,
மது .....

சிந்தனை வற்றி,
சந்தேகம் வளர்க்கும்
போதை வெறி .....

அன்பானவர்களை
கொன்றிட பயன்படுத்தாதே ,
மது .....

பகை வளர்த்து
பாடை பரிசளிக்கும் .
புகையிலை .....

மனிதனை
மிருகமாக்கும்.
போதை .....

புகையிலை கூட்டத்தில்
மலர்வதே இல்லை ,
புன்னகை .....

போதை மனிதர்கள்
தேடுகிறார்கள்,
கால் தடங்களை .....

கூடா
நட்பு.
புகைப்பழக்கம்.....

புகை பழக்கத்தை
தொலைப்போம்,
நம் குடும்பத்தையும் , நல்லுலகத்தையும் காப்போம்.....

அறிவேந்தல்
முனைவர்
கவிஞர் ராஜா ஆ
பண்ணுருட்டி

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS