Header Ads Widget

Responsive Advertisement

வீரம் விளைந்த தேசம்


அன்புக்கு நான் என்றும் அடிமை என்று உணரவைத்து
அமைதிக்கே முதலிடம் என்று சொல்லும் என் தேசம்
எல்லையற்ற தொல்லைகளை எல்லையில்சந் தித்தாலும்
நட்புக்குக் கைநீட்டும் தேசம்தான் என் தேசம்.

வீணாக என்றுமே சண்டைக்குச் சென்றதில்லை
சண்டையென்று வந்துவிட்டால் பின்நோக்கிப் பழக்கமில்லை
கல்லாலே அடித்தாலும் தடிகொண்டு தாக்கினாலும்
கோடையிடி போல் பாய்ந்து அழிக்காமல் விடுவதில்லை.

பனிமலையின் உச்சியிலே  பணிசெய்யச் சென்றவர்கள்
பாரதத்தின் பாதுகாப்பைக் கவனிக்கச் சென்றவர்கள்
பதிலுக்குப் பதில் கொடுத்து பலபேரின் உயிரெடுத்து  
தன்னுயிரை ஈந்து இன்று தியாகியாகி நிற்கிறார்கள்.

வீரர்கள் செய்த தியாகம் வீணாகிப் போகுமென்று
சீனத்துத் துரோகிகளே சிறிது கூட நினைக்காதீர்
ஓரடி நிலம் கூட ஆக்கிரமிக்க நினைத்தாலும்
ஒருபிடி மண் உனது பிணத்தில் இதை மறக்காதீர். 

வெறிகொண்ட வேங்கையாக பலி வாங்கக் காத்திருக்கும்
பாரதத்தின் வீரர்களே பாரதம் உன் பின்னாலே.
மோதி அழித்துவிடு ஒன்றுக்குப் பத்து என்று
சாந்தி அடையட்டும் தியாகிகளின் ஆத்மாக்கள்

ஓங்கி ஒலிக்கட்டும் வெற்றியின் கோஷங்கள்
ஓயாது ஒலிக்கட்டும் வெற்றியின் கோஷங்கள்.

*கிராத்தூரான்*