மனிதன் என்ற விலங்கைப் படைத்தாய்,
அவனுக்குள் மனிதம் வைத்தாய்.
பெண்மையில் தாய்மை வைத்தாய்,
தாய்மைக்குள் பாசம் வைத்தாய்.
ஆணுக்குள் ஆண்மை வைத்தாய்,
அத்துடன் வீரம் வைத்தாய்.
நெஞ்சுக்குள் காதல் வைத்தாய்,
காதலில் தியாகம் வைத்தாய்.
குழந்தைக்குள் அன்பை வைத்தாய்,
அன்புக்குள் மகிழ்ச்சி வைத்தாய்.
அனைத்தையும் வைத்த என் இறையே
உன்னைத் தான், உன்னையேதான் தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.
பலருக்குள் மனிதம் வைத்து
சிலருக்குள் அதனை மறைத்தாய்,
பலருக்குள் தாய்மை வைத்து
சிலருக்குள் கொடுமை வைத்தாய்,
சிலருக்குள் வீரம் வைத்து
பலரை நீ கோழையாய் வைத்தாய்,
காதலை எங்கும் வைத்தாய்
தியாகத்தைச் சிலரில் வைத்தாய்,
குழந்தைக்குள் அன்பை வைத்தாய்
பலர் மகிழ்வை எடுத்துச் சென்றாய்,
ஓரவஞ்சனை ஏன் தான் என்று...
ஓரவஞ்சனை ஏன் தான் என்று
கேட்கத்தான் நினைக்கிறேன் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.
*சுலீ. அனில் குமார்.*