Header Ads Widget

Responsive Advertisement

செம்மறியாடு.....

செம்மறியாடுகளாய்

வண்டியில் பூட்டப்பட்டு

தலைக்கு 

இருநூறென்று

பட்டியிலடைக்கப்பட்டு

சந்தையில்

விற்பனைக்குச்

செல்லும் 

செம்மறி ஆடுகளாய்

தேர்தல்

சந்தையில்

விற்கப்படுகிறாய்..


விற்கப்படுவது

உன்னை

மட்டுமல்ல

உன்

உரிமைகளையும்

தான்..


தலைகுணிந்தே

வாழும்

செம்மறியே

ஆடும்படி ஆட்டிவிக்கும்

இடையனிடம்

மடையனாய் மறுத்துபேசாமல்

செவ்வனே 

வாழ்கிற

செம்மறியாட்டுக்

கூட்டமே

கொஞ்சம்

தலைநிமிர்ந்து

பார்

உன்

தலைமுறையை..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..