காலையில்
கதிரவன் கதிர்களை விரிக்கின்றான்
விடியலும் விரைவாய் எழுகின்றது
இருட்டும் விரைவாய் மறைகின்றது
பறவைகள் பலவிதமாய் கீச்சிடுகின்றன
குயில்களும் அழகாய் பாடுகின்றன
சேவலும் கொக்கரிக்கின்றன
மரங்கள் மணம் பரப்புகின்றன
மண்வாசனை மூக்கைத் துளைக்கின்றன
பூக்களும் தன் இதழ்களை விரிக்க
வண்டுகளும் தேன் உண்ணச் செல்கின்றன
இல்லமதில் அம்மாவின் சமையலும் வாசமும்
சாம்பிராணி புகையும்
சுப்ரபாதமும் காதில் விழவில்லையோ
நீடு துயிலுறும் இளைஞனே
நீண்ட தூக்கம் மடியின் ஆக்கம்
விரைவில் விலக்கிடு நித்திரை
வாழ்வில் பதித்திடு முத்திரை
தி.பத்மாசினி