நிலப்பரப்பை வெடிக்க வைத்து மழை நீரை நுழைய வைத்து நிலத்தடி நீர் உயரவைக்கும் பொறியாளரே வெயில் என்றால்.....
பச்சையத்துடன் இணைந்து வேதிவினை பல புரிந்து
உணவு படைக்க தாவரத்தை உதவி நிற்கும் விஞ்ஞானியே
வெயில் என்றால்.....
கதிர்களை அனுப்பிவைத்து சருமத்தைக் காக்கவைத்து
நோய்களை துரத்திவிடும் மருத்துவர் தான்
வெயில் என்றால்.....
தன் ஒளியை பகிர்ந்தளித்து நிலவவளை ஒளிரவைத்து
இருளதனை மறையவைக்கும் தியாகிதான்
வெயில் என்றால்.....
பலனை எதிர் நோக்காமல் வசவுகளால் வருந்தாமல்
கடமையைச் செய்து நிற்கும்செயல்வீரன்
வெயில் என்றால்.....
வெயிலே உன்னை ஆராதிக்கிறேன்
உன் சேவையை நானும் போற்றி நிற்கிறேன்
உன் ஒளியால் நானும் வளர்ந்து நிற்கிறேன்
உன் நிழலாய் இருக்க நான் நினைக்கிறேன்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*