வேலூரின் கோட்டை
போன்றே
வேலூரின் கோடை
பிரசித்தம்!
கோடை வந்தாலே
கதிரவனுக்குக் கொண்டாட்டம்!
வேலூரைத் தேர்ந்தெடுப்பான்
தேனிலவு கொண்டாட!
வேலூரின் புரட்சியே கதிரவனை ஈர்த்தது!
வேலூரைக் காதலிக்கவும்வைத்தது.
ஆதலினால்
கோடையிலே
வேலூரின் மண்ணைத் தழுவிடவே காதல்கொண்டு
கதிரவன் அங்கே
அதிகம் இறங்குகிறான்!
மேலும்
வேலூர்மக்கள்
அன்பானவர்கள்.!
காதலின் அருமை புரிந்தவர்கள்!
அதனாலே
மிக கிட்டத்தே கதிரவன் காய்ந்தாலும் கதிரவனையும் அவன் காதலியாம்
வேலூரின் புரட்சிமண்ணையும்
மனதுக்குள் எண்ணி
எவ்வளவு வெயில்
அடித்தாலும்
தாங்கிக் கொள்வார்கள்!காதலை வாழவைப்பார்கள்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*