இயற்கையின் வண்ணம்
இன்ப வண்ணம்
மனதை மயக்கும் வண்ணம் படைத்தது
இறைவனின் கை வண்ணம்
நிலமகள் பச்சை வண்ணம்
ஆகாய மங்கை நீல வண்ணம்
நீரின் வண்ணம் எவ்வண்ணம்
நெருப்பில் உதிப்பது சிவப்பு வண்ணம்
காற்றில் உள்ளது பல வண்ணம்
வறுமையின் வண்ணம் சிவப்பு
பசியால் வாடுவோரின் வண்ணம் கருப்பு
அதை தீர்ப்போரின் உள்வண்ணம் வெளுப்பு
வண்ணம் கண்ணைக் கவரும் வண்ணம்
ராசிக்கொரு வண்ணம்
பலரது வாழ்வை நிர்ணயிப்பது திண்ணம்
ஈகையின் வண்ணம் மென்மை
பெறுவோரின் வண்ணம் தாழ்மை
கண்ணுக்கு ஒரு வண்ணமுண்டு
காணும் காட்சிக்கும் வண்ணமுண்டு
வண்ணங்கள் பல எண்ணங்ளை தோற்றுவித்து
கவிதை வடிக்கத் தூண்டுவதுண்டு
மனதிற்குள் ஓர் மாசற்ற வண்ணம்
பலரது உள்ளத்தைக் கவரும் வண்ணம்
இருந்தால்
நம் வாழ்வு வண்ணமயமாய் இருக்கும்
தி.பத்மாசினி