பணம் மனிதனை மயக்கும் மாய வலை
அதில் சிக்காதோர் யாருளர்?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம்
பணத்தை அளவோடு நேசித்தால் நாம் அதற்கு எஜமான்
அளவுக்கு மீறி நேசித்தால்
அது நமக்கு எஜமான்
பணத்தாசை ஒருவழிப் பாதை
அதில் சென்றால் திரும்ப முடியாது
அதனால் அழிவு நிச்சயம்
பணத்தை நீட்டினால் பரமனும் வரம் தருவான்
அதை வேண்டுவோன் பச்சோந்தியாயும் மாறுவான்
பணம் ஏன் தெரியுமா செல்வந்தர் வீட்டில் இருக்கிறது
அங்கு அதற்கு பாதுகாப்பும் உண்டு
படுக்க இடமும் உண்டு
ஏழை வீட்டிலோ பாதுகாப்பும் இல்லை
படுக்க இடமும் இல்லை
பணத்தைக் கண்டால் பல்லிளிக்கும் மானிடரே
பாசத்திற்கும் கொஞ்சம் பால் வாருங்கள்
தி.பத்மாசினி