Header Ads Widget

Responsive Advertisement

மண் பானை



ஆத்தோரம்
தென்னை மரம்,
தேடிப்பார்த்தேன் வயலோரம்,
ஏற்றச் சத்தம் கேக்குதடி,,,
எங்க மச்சான்
நீ இருக்க,
நாம
ரெண்டு பேரும் சேர்ந்திறைக்க,,,
தண்ணீர்
ரெண்டு பேரும்
சேர்ந்திரைக்க,,,

சேறோடு போராடும்
சீமைத் துரை
அவர் பெயரு
சீமைக்கு போகையிலே
சேர்ந்து நானும் போகப் போறேன்,,,
ஊரோடு பேர் வாங்கி
நாங்க
ஒத்துமையா வாழப்போறோம்
நாங்க
ஒத்துமையா
வாழப்போறோம்,,,

விளைஞ்ச
நெல் கதிர் அறுத்து,
விடியுமுன்னே சூடடிச்சு,
ரெட்ட மாட்டு வண்டியிலே
நெல்லேற்றி,
பட்டணந்தான் போகப் போறோம்
நாங்க
படம் பார்க்க
பட்டணந்தான்
போகப் போறோம்,,,

சந்தைப் பக்கம் போகையிலே மஞ்ச மிளகாய் வாங்கிப்புட்டு
அடுக்குப்
பானை
மண் பானை
அதுல ஆறு வாங்கிட்டு
வெள்ளரிக்க வாங்க சொல்லி வேலாயி
சொல்லி விட
எல்லாத்தையும் வாங்கிப் புட்டோம்
நாங்க
சந்தையிலே
எல்லாத்தையும்
வாங்கிப் புட்டோம்,,,

புதுப்பானை
வந்து விட்டால் பொழிவாகும் வீடெல்லாம்,,,
சுத்தி வர நின்னு பாக்கும்
நம்ம ஊரு ஜனமெல்லாம்,,,
புத்தம் புது பானையத்தான் பூசிடுவோம் தரையோடு,
மூடி ஒன்னு
போட்டிடுவோம் இல்லாமல் குறையோடு,,,

இத்தனை மேல ஒன்னு நெஞ்சுக்குள்ள இருக்கு மச்சான்,,,
நெனப்பிருந்தால்
மனசுக்குள்ளே நீயே வந்து சொல்லு மச்சான்,,,
சத்தியமா லவுக்கை (ரவிக்கை) ஒன்னு
வாங்கித் தாரேனு சொன்னியே,,,
சமயத்துல கேட்டுப் புட்டேன்
அதை மனசுக்குள்ளே
எண்ணியே,,,
மச்சான்
மனசுக்குள்ளே எண்ணியே,,,,,

பாலா