தாலாட்டு பாட நானுனக்கு தாயுமில்லை
தோளில் சுமக்க தந்தையுமில்லை
கைப்பிடித்துச் செல்ல தமக்கையும் இல்லை
அரவணைத்துச் செல்ல அண்ணனும் இல்லை
உன் நோய் தீர்க்கும் மமருத்துவனும் இல்லை
நீ தலை சாய்க்கும் தோழனுமல்ல
உனக்கு ஆறுதல் கூறும் தோழியுமல்ல
உன்னை பகைக்கும் பகைவனும் அல்ல
உன்னை நேசிக்கும் நண்பனுமல்ல
நான் வீரனுமல்ல
நான் விவேகியுமல்ல
நான் பொறாமைக்காரனும் இல் லை
நான் போட்டிக்காரனும் இல்லை
நான் குழந்தையுமல்ல
நான் குமரியுமல்ல
நான் முதிர் கன்னியும் இல்லை
நான் முடியாதவளும் இல்லை
நான் மிக மிக மூத்தவள்
என்னை நேசிப்பவர் யாராயிருந்தாலும்
தன்னை மறந்து மெய் மறந்து
பகைமை மறந்து
இன்பத்தில் மூழ்கிடுவார்
தி.பத்மாசினி