உனக்கு அடிபட்டால்
இதயத்தில் வலிக்கவேண்டும்
உன் துன்பத்தில்
கண்கள் கலங்கவேண்டும்
நீ சிரித்தால்
முகம் மலரவேண்டும்
நீ.. பேசாவிட்டாலும்
உனை நினைக்க வேண்டும்.
கண்ணால் பார்க்காத போதும்
காதில் கேட்காத போதும்..
கட்டித் தழுவாத போதும்..
காத தூரத்தில் இருந்த போதும்
எத்தனை காலமானாலும்...
உன்னை நினைத்தால்...
மனம் மகிழ்கிறதோ..
மலர்கிறதோ..
அதுதானே நல்ல நட்பு...,!
நல்ல அன்பு
நல்ல உறவு..!
அப்துல் முத்தலிப்