விடிந்ததென்றால்
அழகு பிறந்ததென்று பொருள்!
அழகு பிறந்ததென்றால்
ஞாயிறு
உதித்ததென்று பொருள்!
ஞாயிறு உதித்ததென்றால்
கண்களுக்கு விருந்து காத்துக் கிடக்கிறதென்று பொருள்!
காக்கவிடலாமா கண்களை ?
விழித்தெழுவோம்!
புதுவிடியலில் நனைந்த புத்துலகின் அழகையெல்லாம்
ஒருதுளியையும் சிந்தவிடாதுப் பருகிச் சுவைப்போம்!சுவைத்ததனால் நாமும் அழகுபெறுவோம்!
அனைவருக்கும்
*அழகிய காலை வணக்கம்*
*த.ஹேமாவதி*
*கோளூர்*