இலையுதிர்க் காலம்
அது மரங்களின்
தவக் காலம்
இக் காலத்தில்
மரங்கள் இலைகளை
மட்டும் உதிர்க்காமல்
தம்மில் உள்ள
அல்லன அகற்றி
தம்மைத் தாமே
செம்மைப் படுத்தி
புதுப் பொலிவு
பெற்று மீண்டும்
மீண்டும் துளிர்த்து
அரும்பத் தொடங்கும்
நாமும் ஓர் நாள்
அது போல் தவமிருந்து
நம்மில் உள்ள தீய
சிந்தை இலைகளை உதிர்த்து
மீண்டும் நாமும்
புதுப் பொலிவு மரங்களைப் போல பெறுவோமே
தி.பத்மாசினி