Header Ads Widget

Responsive Advertisement

நினைவில் நின்ற பயணம்



கல்வி கற்று முடித்தபின்பு
சான்றிதழைப் பெற்றுவிட்டு
வேலை தேடி டில்லி நோக்கி நான் சென்ற பயணம்.

தாய்வடித்த கண்ணீரைக் காணாதது போல் நடித்து
உறவு வந்து வழியனுப்ப
இரயிலேறிப் பயணம்.

நினைவினாலே கோட்டைகட்டி
மனதினிலே அன்பைப் பூட்டி
எதிர்காலக் கனவோடு வெகுதூரப் பயணம்.

வேற்றுமொழி ஊர்களிலே பயின்றமொழி உதவாமல்
மாற்று மொழி  நான் பயில முடிவெடுத்த பயணம்.

மூன்று நாள் பயணத்தில் கஷ்டங்கள் பட்டாலும்
தலைநகர் செல்கின்றேன்
என மகிழ்ந்திருந்த பயணம்.

சருகாக இருந்த என்னை மெருகூட்டி, வலுவூட்டி
புதிதாக உருவாக்கி உயர்வளித்த பயணம்.

கிணற்றுத் தவளையாக இருந்து வந்த என் வாழ்வில்
அனுபவப் பாடத்தை அள்ளித் தந்த பயணம்.

என்னில் இருந்த என்னை, என்னை உணரவைத்த
உன்னதமானொரு பயணம்
என் நினைவில் நின்ற பயணம்.

*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*