நான்
பேசநினைப்பதெல்லாம்
நீபேச முடியாது!
ஆனால்
என்விழி பேச நினைத்ததை உன்விழியாலும்
பேசமுடியும்!
என்விழியால்
நான்பேச நினைத்ததெல்லாம்
உன்விழிபார்த்து
தெளிவாகப் பேசிவிட்டேன்!
பதிலுக்கு நீ
வாய்திறந்து பேசினாலும் சரி இல்லை என்னைப் போல் விழியாலே பேசினாலும் சரி
காத்திருக்கிறேன் அன்பே!
இப்படிக்கு
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியாகப்
பிறந்துவிட்ட
உன்காதலைப் பெற
விரும்பும் பெண்
த.ஹேமாவதி
கோளூர்