ஏய்த்து வாழ்பவர் மத்தியிலே
உழைத்து வாழ்பவர் மகிழ்கின்ற
ஓரிரு நாட்களிலே உழவர்களின் நாட்களிது.
பஞ்சத்தின் வஞ்சத்தைக் கெஞ்சலோடு ஒதுக்கிவிட்டு
வஞ்சனை இல்லாமல் சிரித்து மகிழும் நாட்களிது.
தண்ணீர்வற்றிப் போனபின்னும்,
கண்ணீர் வற்றிப் போனபின்னும்,
தன்னம்பிக்கை தளராமல்
எம் விவசாயி எழும் நாட்களிது.
கஜா வந்து தொலைத்துவிட்ட
வளங்களின் மிச்சங்கள்
ஆறுதல் அளித்து, தேறுதல் தருமென்றால்
இந்த நாட்கள் சிறந்த நாட்கள்.
இலவசம் என்றாலும் ஆயிரம் ரூபாய்
மதுக்கடைக்குச் செல்லாமல்
மளிகைக் கடைக்கு செல்லுமென்றால்
இந்த நாட்கள் இனிய நாட்கள்.
விழுந்துவிட்ட விவசாயி எழுந்து நிற்கத் துணைக்குமென்றால்,
தளர்ந்துபோன விவசாயம்
தழைத்து நிற்க உதவுமென்றால்,
பொங்கட்டும் பொங்கல் பொங்கலோ பொங்கல்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*