*விவசாயி ஆகப்போறேன்*
(23- டிசம்பர் தேசிய விவசாயிகள் தினம்)
என்ன ஆகப் போகிறாய்? என்ன செய்யப் போகிறாய்?
பள்ளியிலே வகுப்பினிலே ஆசிரியர் கேட்கிறார்.
கலெக்டராக ஆகவேணும் அப்பாவின் ஆசை.
மருத்துவர் தான் ஆகவேணும் அம்மாவின் ஆசை.
வக்கீல் தான் ஆகவேணும் தாத்தாவின் ஆசை.
பொறியாளர் ஆக வேணும் பாட்டியோட ஆசை.
என்வகுப்பு மாணவர்கள் எல்லோரும் எழுந்து
இப்படித்தான் பல பதில்கள் மாறி மாறிச் சொன்னார்.
எல்லோரும் மருத்துவரும் விஞ்ஞானியுமானால்
சோற்றுக்கு என்ன வழி யோசித்தேன் நானும்.
வரப்புயர்ந்து நீருயர்ந்து நெல்லுயர்ந்தால் தானே
வறுமையது ஒழிந்து விடும்
வளங்கள் பல பெருகிவிடும்....
சேற்றிலே விவசாயி கால்வைத்தால் தானே
சோற்றிலே எல்லோரும் கை வைக்க முடியும்....
எவரிடமும் கைகட்டி வாய்பொத்தி நிற்க வேண்டாம்,
எனக்கு நானே முதலாளி எனக்கு நானே தொழிலாளி.
எண்ணித்தான் பார்த்தேன் நான், எழுந்து நின்று சொன்னேன் நான்
விவசாயி ஆகப்போறேன்...
விவசாயி ஆகப்போறேன்.
*சுலீ. அனில் குமார்*
*கே.எல்.கே கும்முடிப்பூண்டி.*