ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்
கொண்டவர் கண்ணை மறைக்கும்
ஆத்திரம் அதிகமாக அதிக மாக
எதிரில் இருப்பவர் பலமடைவார்
ஆத்திரம் சுற்றி இருப்பவரை பிரித்துவிடும்
வேண்டாத பிரச்சினைகளை அழைத்து வரும்
ஆத்திரம் பொருளை அழித்துவிடும்
பொறுமையை இழக்கச் செய்யும்
குணத்தையும் கெடுத்து விடும்
மரியாதையையும் குலைத்து விடும்
லட்சுமணன் கொண்ட ஆத்திரம்
சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது
அதனால் பெரிய சண்டை மூண்டது
கண்ணகியின் ஆத்திரம் மதுரையை தீக்கிரையாக்கியது
பெற்றோர்களின் ஆத்திரம் கௌரவக்
கொலையையும் செய்யத் தூண்டும்
நம்முடைய ஆத்திரம் நம்மை அழித்துவிடும்
ஆத்திரத்தை அடக்கி
அன்பை பெருக்கி
இன்பமாய் வாழ்வோம்
தி.பத்மாசினி