கொஞ்சலில் திளைத்த குழந்தைப் பருவமும்,
துள்ளிவிளையாடிய பிள்ளைப் பருவமும்,
கவலையே படாத மாணவப் பருவமும்,
உள்ளம் கவர்ந்த நல் இளமைப் பருவமும், எல்லாமே இன்று நினைவுகளாக.
தும்பியைப் பிடித்து விளையாடிய நாட்களும்,
வண்ணத்துப் பூச்சியுடன் வலம் வந்த நாட்களும்,
காதலுக்காகக் காத்திருந்த நாட்களும்,
காதலைச் சொல்லாமல் தவித்து நின்ற நாட்களும்,
எல்லாமே இன்று நினைவுகளாக.
பாசத்தைப் புரிய விழையாத நாட்களும்,
பெற்றோருடன் மகிழ்ந்திருக்க முடியாத நாட்களும்,
உற்றாருடன் உறவாட நினைக்காத நாட்களும்,
எல்லாமே இன்று நினைவுகளாக.
இழப்புகள் வரும்வரை இழப்புகளால் வரும் இழப்புகளை யாரும் உணர்வதில்லை,
இழப்புகள் வந்தபின் இழந்துவிட்டோமென்ற நினைப்பை மறக்கவும் முடிவதில்லை,
இழப்புகள் தருகின்ற வலிதனை நினைக்கையில்
இழப்பன்றி வேறு வலி தெரியவில்லை,
அந்த இழப்பை நிரப்ப வேறு வழியுமில்லை.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*