அவனும் அவளும்
சேர்ந்து வெளியே
செல்கையில்
வானமும் பூமியும்
ஒன்றையொன்று
பகைத்துக் கொண்டன!
வானத்தின் குற்றச்சாட்டு அவன்முகம் மட்டும்தான் நான்காண்கிறேன்!
அவள்எழில்முகத்தை நீமட்டுமே காண்கிறாய்!என்று.
நான் என்னசெய்வேன்?
நாணத்தால் அவள்
கவிழ்ந்த தாமரையாய் நிலம்நோக்கி நடக்க நான் அவளைப் பார்க்க முடிகிறது!
என்மீது ஏனோ உந்தன் கோபம்!, என்று விடைதந்த நிலம் மேலும் சொன்னது
என்னாலும்தான் உன்னால் பார்க்கமுடிந்த அவன்முகம் என்னால் பார்க்க முடியவில்லை! இற்கென்ன சொல்கிறாய் என்று!
அதைக் கேட்ட வானம் அவன் ஆண்மகன் அல்லவா?தலைநிமிர்ந்து வீரநடை போடுகையில் உன்னால் எப்படி அவன்முகம் காணமுடியும்?
அப்போது குளத்துநீர் வானைப் பார்த்து
அவள்முகம் என்னில் தெரியும் பார்த்துக் கொள் என்று வானை ஆறுதல் படுத்தியது!
புவிதொட்ட வெயிலோ பூமியின் காதிலே மெல்ல சொல்லியது
நான் பிறக்கக் காரணமான கதிரவன்போல அவன்முகமும் ஒளிர்முகமாய் இருக்கும் என்று
பூமியை ஆறுதல்படுத்தியது!
த.ஹேமாவதி
கோளூர்