பூக்கும் பூக்களையெல்லாம் சூட முடியாது
காய்க்கும் காய்களையெல்லாம் உண்ண முடியாது
பழுக்கும் கனிகளையெல்லாம் உண்ண முடியாது
விண்ணில் உள்ள அனைத்தையும் காண முடியாது
பூமியில் உள்ள அனைத்தையும் தோண்டி எடுக்க முடியாது
கடலில் உள்ள அனைத்தையும் வலையில் பிடிக்க முடியாது
தோற்றத்தை வைத்து மனிதனின் குணத்தைக் காண இயலாது
வெள்ளாடைக்குள்ளும் விஷமம் உண்டு
அழுக்காடைக்குள்ளும் பாசம் உண்டு
பணம் படைத்தவர் எல்லோரும்
மனம் படைத்தவரல்லர்
நல்ல குணம் படைத்தவர் எல்லோரும் பணம் படைத்தவரல்லர்
குணமொன்றே குன்றேறி நிற்கும்
தி.பத்மாசினி