அறிவைக் கொடுப்பது மட்டுமா கல்வி?
அன்போடு பண்பையும்,
பண்போடு மாண்பையும் பெற்றுத்தருவது கல்வி.
பணத்தைக் கொடுத்து வாங்குவதா கல்வி?
மனத்தைக் கொடுத்து, மாட்சிமை உணர்ந்து
மதித்துப் பெறுவது தான் கல்வி.
வேலைக்காக மட்டும் கற்பதா கல்வி?
பிறர் தேவைகள் உணர்ந்து, சேவைகள் பல செய்பவர்
வாழ்வில் உயர்வைக் கொடுப்பது கல்வி.
கற்கவேண்டுமே என்று கற்பதா கல்வி?
கற்று, கற்றபடி நடந்து, மற்றவர் புகழ வாழ்ந்து சிறக்கவைப்பது கல்வி.
பிறர் கற்கிறார் என்பதால் கற்கவேண்டியதா கல்வி?
தன்னை உணர்ந்து, தன் இலட்சியம் உணர்ந்து கற்க வேண்டியது கல்வி.
கல்வியின் மதிப்பினைத் தெரிந்தவர் கற்பார்,
மற்றவரோ அங்கு வீதியில் நிற்பார்,
அதைக்கண்டு நிற்பவர் கல்வியை விற்பார்,
விற்கப்படும் கல்வியை மக்களும் மதிப்பார்.
*சுலீ அனில் குமார்*