இன்றைய இளைய சமுதாயமே
காத்திரு! பத்துமாத காத்திருப்பின் பின்புதான் அழகிய குழந்தை.
காத்திருக்கும் முசெல்தான் நற்சிப்பியாகின்றது.
அரிசி வேகும் வரை காத்திருந்நதால் மட்டுமே சுவையான உணவினைப் பெற முடியும்.
வலியோடு பொறுமையாய் காத்திருந்தால் மட்டுமே அழகிய சிற்பமாக இயலும்.
மண்ணுக்கள் காத்திருக்கும் மரமே கருப்புத் தங்கம் எனும் நிலக்கரியாகிறது.
நாளாயினும், மாதமாயினும், வருடமாயினும் காத்திருந்தால் மட்டுமே மாற்றம் பெற இயலும்.
இளைய சமுதாயமே இந்த இயற்கை நியதிக்கு நீ மட்டும் விதிவிலக்கு அல்ல.
உணவு, உடை வாகன வேகம் என அனைத்திலும் புதுமை என்ற பெயரில் விரைவும் துரிதமுமம் உன் தாரக மந்திரமாக உள்ளது.
மாற்றிக்கொள். மத்தான எதிர்காலம் உன் கண் முன்னே. **