எட்டிப் பிடிக்கும் மேகமே
எடுத்தது பூமிக்கு தாகமே
வராதிருந்தால் சோகமே - நீ
வந்தால்
இரு
போகமே!
வெட்டி வேலை நானறியேன்,
வீதிக்கு செல்ல நான் தெரியேன்,
பட்டிணம் என்பார் என் மக்கள்,
இதுவரை நானும் கண்டறியேன்,,,
கண்டதும் கதிரை,
வணங்கிடுவேன்
வயலில், வாழ்வை அமைத்திடுவேன்.
நண்பனும் அங்கு வந்து விட்டால்,
நல்லதை பேசி மகிழ்ந்திடுவேன்,,,
உன்னைப் பார்த்தே நின்றிடுவேன்,,,
வானில், கண்களை நித்தம் வைத்திடுவேன்,,,
வீசும், காற்றின் திசை கண்டு
நாளைய உலகை
கணித்திடுவேன்,,,
நீராய் நிலத்தில் நின்றிடனும்,
நீதான் அதற்கு வந்திடனும்,
சேறாய் கிடக்கும்
நிலமெல்லாம்,
நெற்கதிர் எல்லாம் விளைந்திடனும்,,,
தென்றலும்
அங்கு
உன்னாலே,
வருவதும்
அதுவும் தன்னாலே,
பிழைக்கும் உயிர்கள்
பின்னா(ளே) லே,,,,
மேகமே!
ஆவது எல்லாம் உன்னாலே!!
நீ,
பொழிந்தால், எல்லாம் நன்னாளே!!!
_ பாலா.