அவள்கண் ஒரு சி பி சி ஐ டி
நான் எங்கே இருந்தாலும் கண்டுபிடித்துவிடும்
அவள் நினைவு ஒரு மின்காந்தம்
நான் எங்கே இருந்தாலும் இழுத்து வந்துவிடும்
அவள் எண்ணம் ஒரு ஏடு அதில்
என்னை ஓவியமாய் தீட்டி வைத்திருக்கிறாள்
அவள் மனம் ஒரு கோயில் அதில்
என்னை தெய்வமாய் வைத்திருக்கிறாள்
நானோ அவளை என் உயிராய் வைத்திருக்கிறேன்
தி.பத்மாசினி