Header Ads Widget

Responsive Advertisement

நாங்கள் செய்த தவறென்ன

ஆசிரியர் பணியை ஏற்ற நாள் முதல்

பக்தியாய் அதனைச் செய்கின்றோம்


சிறியவரிடம் சீற்றம் காட்ட வேண்டாமென்று

இன்முகத்துடன் பாடம் கற்பித்தோம்


பள்ளிக்கு வாரா பிள்ளையின் வீட்டுக்கு

தொலைபேசியில் அழைப்புவிடுத்தால்

அடுத்த முனையில்

பொறுப்பில்லாத பதில் வரும்


மெல்லக்கற்கும் மாணவனை 

பின்னே இருக்க வைத்து பாடம் கற்பித்தேன்

நான்கு மணிக்கு வீட்டுக்கு அனுப்புங்க அன் கடையை பார்க்கணும் என்றார் அப்பா


பிள்ளைகள் பாடம் படிக்க வேண்டுமென்றும்

பாடத்தை முடிக்க வேண்டுமென்றும்

சிறப்பு வகுப்புகள் வைத்தால்

வருபவர் சிலர்

வாராதோர் பலர்

சிலரோ எங்கோ சுற்றி  

காலம் தாழ்த்தி வீட்டுக்குச்சென்று

தாமதத்திற்கு காரணம் ஆசிரியர் என்கின்றான்

உண்மை புரியா பெற்றோரும் ஆசிரியரை வசைபாடி தீர்க்கின்றார்


பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கெல்லாம்

பெற்றோரும்  சமூகமும்

ஆசிரியரைத் திட்டித் தீர்க்கின்றார்


தவறு செய்யும் மாணவனை திருத்தம் செய்தால்

எங்களுக்கு கிடைக்கும் பரிசு கத்திக்குத்து


எழுதாத மாணவனை ஏசாதே

தவறு செய்யும் மாணவனை தண்டிக்காதே

மாணவனின் மனநிலை அறிந்து பாடம் எடுக்க வேண்டும்

எங்கள் மனநிலை யார் அறிவாரோ


நாங்கள் என்ன கல்லோ மண்ணோ

பேசமுடியா கற்சிலையோ

மானமும் அவமானமும் எங்களுக்கில்லையோ


நாங்கள் செய்த தவறென்ன

ஆசிரியர் பொறுப்பேற்றதா

நல்ல மாணாக்கர்களை உருவாக்க நினைத்ததா

சமூகத்தில் மாற்றம் செய்ய நினைத்ததா?


தி.பத்மாசினி