Header Ads Widget

Responsive Advertisement

மை - பாலா

🙏🏻💐மை🙏🏻💐

கண்டேன் உன்னிடம் உண்மை,
கருத்தினில்
பல நன்மை,,,
எடுத்து சொல்வதில் உன் திறமை
எவர்க்கு மில்லாத
தனிமை,,,,

சிறப்பினில்
நீயே
முதன்மை
சிரிப்பினில், கண்டேன்
இனிமை
நிலவினை
போல் வளமை,,,
முகத்தினில் கண்டேன்
இளமை,,,

தன்னிகரில்லா பொறுமை
தந்தது
நீயோ
இம்மை,
பிறந்திடு
நீயும்
மறுமை,
நான்,
பிறந்தால்
நீயே என்
அம்மை!

பாலா,,,