எதிர்த்தே தான் பேசியிருப்பார்
எதிரியாய்த் தான் நினைத்திருப்பார்
எதிரிலே வரும் நேரம்
எதேச்சையாய்ப் பார்க்கையிலே
சின்னதாய் ஒரு புன்னகை
உன் உறவுக்குப் பரிசாக
உன் அன்பின் வெளிப்பாடாகப்
புரிவதற்குத் தேவையா
புரிவதற்குத் தேவையா
கட்டணம்.
முதியோர்கள் இருப்பார்கள்
முடியாமல் இருப்பார்கள்
தனியாக இருப்பார்கள்
தனிமையில் தவிப்பார்கள்
என்னம்மா நலம் தானே?
என்னப்பா சுகம் தானே?
ஒரு வார்த்தை கேட்பதற்கு
ஆறுதலைக் கொடுப்பதற்கு...
ஆறுதலைக் கொடுப்பதற்குத்
தேவையா கட்டணம்.
பார்வையற்றோர் ஆயிருப்பார்
வாய்பேச முடியாதிருப்பார்
எழுதத்தெரியாதிருப்பார்
மொழி புரியாதிருப்பார்
உன்னால் முடிந்த ஓர் உதவி
உணர்வால் உதவும் சிறு உதவி
கனிவுடனே செய்வதற்குக் கட்டளையும் தேவையில்லை
கட்டணமும் தேவையில்லை
மற்றவன் என்று எண்ணாமல்
உற்றவன் என்று எண்ணு போதும்
உற்றவன் என்ற எண்ணம் போதும்.
*சுலீ. அனில் குமார்.*
