Header Ads Widget

Responsive Advertisement

அன்பு தெய்வம் அப்பா - அனில் குமார்



அன்பே தெய்வம் என்றார் - சிலர்
தெய்வமே அன்பு என்றார்
அன்பாய் தெய்வமாய் என்றும் இருப்பது
அப்பா என்று சொல்வேன்
நான் அப்பா என்று சொல்வேன்.

தப்பாகப் பிள்ளை போகாமல் இருந்திடக் கண்டிப்பைக் காட்டி நிற்பார்- தான்
எப்பாடு பட்டாலும் பிள்ளை சிறந்திட வேண்டுமென்றே நினைப்பார்
அவர் வேண்டிக் கொண்டேயிருப்பார்.

உள்ளுக்குள் பாசமும் வெளியிலே வேஷமும் கள்ளத்தனம் புரிவார்
தான் கற்காதவற்றையும் பிள்ளைகள் கற்றிட மோகங்கள் கொண்டிடுவார்
பல தியாகங்கள் செய்திடுவார்.

தவறாகப் பிள்ளை புரிந்துகொண்டாலும்
அதைத் தவறென்று சொல்லமாட்டார்
தவறியும் ஒரு போதும் பதற்றத்தைப் பிள்ளைகள்
எதிரிலே காட்டமாட்டார்
எதையும் தனக்காகச் செய்யமாட்டார்.

அன்பு, தெய்வம், அப்பா மூன்றுமே
ஒன்றுக்குள் ஒன்று அன்றோ
அப்பாவாய் நாம் மாறும் நாளிலே உணர்ந்திடும்...
அன்பு தெய்வம் அப்பா அன்றோ.

*சுலீ. அனில் குமார்.*