Header Ads Widget

Responsive Advertisement

மது அழியவேண்டும் - ஹேமாவதி

கம்பன்கலை இலக்கியக் கழகம்
மற்றும்
திருவள்ளுவர் குடில்

*மதுவை ஒழிப்போம்!*
*மானத்தை மீட்போம்!*

மணந்த மங்கைமனம் மகிழவேண்டும்!
பெற்றோர் மனங்குளிர இல்லறம் செழிக்க வேண்டும்!
இதற்கு மது அழியவேண்டும்!புது விடியல் மலரவேண்டும்!
உழைத்துப் பெற்றபணம் பெருகவேண்டும்!
உற்றாரும் உறவினரும் மதித்து
நடக்கவேண்டும்!
இதற்கு மது அழியவேண்டும்!புது விடியல் மலரவேண்டும்!
நோயிலாத நலவாழ்வு வாழவேண்டும்!
ஊருக்குள் உன்குடும்பம் ஓங்கவேண்டும்!
இதற்கு மது அழியவேண்டும்!
புது விடியல் மலரவேண்டும்
மதியின் ஒளியாய் முகம்திகழ வேண்டும்!
மகிழ்ச்சியாய் ஆணும்பெண்ணும்
இல்லறம் நடத்த வேண்டும்!
உழைத்து ஈட்டிய வருமானமெல்லாம்
ஒழுங்காய் வீடுபோய் சேரவேண்டும்!
கட்டிய மனைவியும்
பெற்றபிள்ளைகளும்
உன்னை மதிக்கவேண்டும்!
ஊரும் போற்றி வணங்கவேண்டும்!
ஈரல்கெட்டு குடலது அழுகி அற்ப ஆயுளில் மரணங்கள் ஏற்படாமல் இருக்கவேண்டும்!
மனைவிமார்களின் தாலிகள் எல்லாம் அடகுக்கடை வாசலுள் நுழையாமல் இருக்கவேண்டும்!
இளையபாரதம்
போதையின் பாதையில் செல்லாமல் வாழ்வில் சாதனை படைக்கவேண்டும்!
இவையெல்லாம்
நடக்க வேண்டுமெனில்
*மது அழியவேண்டும்!*
புது விடியல் மலரவேண்டும்!முகம் முழுமதியென ஒளிரவேண்டும்!

த.ஹேமாவதி
கோளூர்