Header Ads Widget

Responsive Advertisement

காந்த இழைகளே!



காந்தத்தை நீண்ட
இழைகளாக்கிக்
கூந்தலெனக் கொண்டவளோ?
அக்காந்த இழைகள்
என்னை அவளிடம்
கவர்ந்து இழுக்கிறதே!
நெளிந்தோடும் கூந்தல் இழையோடு மோதி
நீராடிய நீரும்எண்ணெயும்
என்ன பாக்கியம் செய்தனவோ?
மின்கம்பி தொட்டால் மின்னதிர்வு உண்டாகும்!
இவள் கூந்தலிழையோ தொடாமலேயே
இன்ப அதிர்வுக்குள் தள்ளுகிறதே என்னை!
பட்டுக்கலைதனை
பட்டுப்பூச்சிகள்
இவள் கூந்தலிடம் கற்றனவோ?
கருமுகில்களுக்கு
இவள் தலையின் கருமயிற்தொகுதி
கரியநிறம் வழங்கியதோ?
அவள்கண் பட்டால்
என்னையே மறந்துவிடும் நான்
அவளின் கூந்தலைத் தொட்டாலோ வான்மீதேறி பறக்கிறேன் ஆனந்தம்பாடி!
என்கவலைகளை மறக்க மீட்டுவேன் அவளின் கூந்தல் இழைகளை!
காலமெல்லாம் அவ்விழைகளுக்குள்
கொத்தடிமையாக
இருந்திடவே விரும்புகிறேன் நான்!

த.ஹேமாவதி
கோளூர்