கைக்கெட்டும் தூரத்தில் கண்ணயர்ந்து தூங்குகிறாய்
என்மீதுள்ள நம்பிக்கையால்!
காற்றில் கலைந்த உனது
துப்பட்டாவை சரிசெய்யும்
என் கண்களில்காமமில்லை!
மழையில். நனைந்து
மண்சாலையில்கைகோர்த்து
நடக்கும் தோழியே.....
உன் உடல் மொழியில்
எனக்கு காதல் என்றுமே
துளிர்த்ததே இல்லை!
துக்கங்களால் நான்
துவளும் வேளைகளில் என்
தலைகோதி ஆறுதல் சொல்லும் உன் முகத்தில்
தாய்மையை மட்டுமே நான்
உணர்ந்ததுண்டு........!
முகம் பார்த்தே என்
படிக்கும்போதெல்லாம்.....
என் சகோதரியை மட்டுமே
கண்டதும் உண்டு......!
தோல்விகள் துரத்தியபோது
தோள்பிடித்தே தைரியம்
சொல்கையில் தோழனாய்...
அவதாரமெடுக்கும் நீ
என் உடன்பிறந்தாளில்லை!
மழலையாய் மடி சாய்வதால்
நீ என் காதலியும் இல்லை!
எந்நேரமும் என் நலம்
மட்டுமே யோசிப்பதால்........
நீ என் மனைவியும் இல்லை!
உன்முந்தானைஎன் சோகம்
துடைக்கத்தானே தவிரநான்
துயில் கொள்வதற்கு அல்ல!
ஏனெனில் ...நீ எனது தோழி!
பாரதியின் கண்ணம்மாபோல.........!
எனக்கும் நீயே
*யாதுமாகி நின்றவள்*
🌹🌹வத்சலா🌹🌹