ஆயிரம் சிந்தனை உள்ளத்தில் தோன்றலாம்,
ஆயிரம் முறை நமைச் சிந்திக்கத் தூண்டலாம்,
சிந்தனை ஒருபோதும் வீணாவதில்லை,
சிந்திக்கத் தெரிந்தவன் தோல்வியடைவதில்லை.
சிந்தனை பலநேரம் கேள்வியாய் மாறலாம்,
கேள்வியே பல நல்ல விடைகளை அளிக்கலாம்,
அந்த விடைகளால் வருவது வேதனையா? சாதனையா?
என்பதைச் சிந்தித்துப் பார்க்கவும் செய்யலாம்.
சிந்தனை செய்தபின் எடுக்கலாம் முடிவை,
முடிவை எடுத்தபின் தேவையில்லை சிந்தனை.
சிந்தனை தந்திடும் சிலநேரம் நிந்தனை,
நிந்தனை வந்தபின் நொந்து நின்று பயன் இல்லை.
சிந்திக்கத் தெரிந்தவன் வாழ்க்கையில் உயர்கிறான்,
சிந்திக்க மறந்தவன் அனைத்திலும் தளர்கிறான்,
இதைச் சிந்தையில் கொள்பவன் நாளும் சிறக்கிறான்,
சிறந்தவனாய் அவன் சிகரம் தொடுகிறான்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*