ஒன்றை (இறைவன்)மறவாதே!
இரண்டை (எண் எழுத்து)வெறுக்காதே!
மூன்றை (முத்தமிழ்)
கைவிடாதே!
நான்கை (நானிலம்)
அழிக்காதே!
ஐந்தை (ஐம்பெரும்பூதங்கள்) மாசுபடுத்தாதே!
ஆறை (அறுசுவை)
இழக்காதே!
ஏழை (ஏழுசரம்)
ஒதுக்காதே!
எட்டை (திசைகள்)
பகைக்காதே!
ஒன்பதை(குணங்கள்)குறைக்காதே!
பத்தை (விரல்கள்)
முடக்காதே!
த.ஹேமாவதி
கோளூர்