Header Ads Widget

Responsive Advertisement

வழுக்கல்



வாழ்க்கையில் வழுக்கை விழுந்தால் பரவாயில்லை
வழுக்கல் தான் விழக்கூடாது

அன்பில் வழுக்கினால் ஆதரவற்றிருப்போம்

பண்பில் வழுக்கினால் பிறருக்கு பாரமாய் இருப்போம்

குணத்தில் வழுக்கினால் குன்றிவிடுவோம்

உதவுவதில் வழுக்கினால் உதாசீனம் செய்யப்படுவோம்

தானத்தில் வழுக்கினால் தரித்திரம் ஆட்கொள்ளும்

உண்மையில் வழுக்கினால் உறவுகள் இருக்காது

செலவில் வழுக்கினால் செல்வம் இருக்காது

மானத்தில் வழுக்கினால் உயிர் இருக்காது

வார்த்தையில் வழுக்கினால் வாசலும் இருக்காது

மரியாதையில் வழுக்கினால் தலைகுனிவு நேரிடும்

வழுக்கலைத் தவிர்த்து
வளமாக வாழ்வோம்

யாவரையும் நேசிப்போம்

நம்மைப்பற்றி யோசிக்க வைப்போம்

தி.பத்மாசினி