Header Ads Widget

Responsive Advertisement

கவிதையில் கலைச் சொற்கள்-- கிராத்தூரான்



       *துணிவே துணை*

*ஒக்கல்* சூழ *பழனம்* சென்று
அறுவடை செய்து அடுக்கியே வைத்து
*நூழிலர்* வந்ததும் அனைத்தையும் விற்று
விவசாய மக்களின் *முகரிமை* ஏற்று
அணிந்த *புடையல்* மார்பினில் தவழ
காதல் *கிழத்தி* அருகினில் நிற்க
அமர்ந்த அந்நாளை *ஓவம்* சொன்னது.

காலம் எத்தனை மாற்றம் கண்டது
விவசாயம் ஏனோ பொய்த்துப் போனது
*வறுவிலி* என்றே *இழிஞன்* சொன்னது
இன்னும் நினைத்தால் முள்ளாய்த் தைத்தது.
*மதுகை* மட்டுமே துணையாய் நின்றது
*நொவ்வல்* அனைத்தையும் மறந்திட வைத்தது.

*மங்குல்* இரண்டு எதிரெதிர் மோதி
*பிடுகும்* மின்னலும்  பூமியில் தாவி
கூடவே மாரி பொழிந்து பரவி
பூமி குளிர்ந்தது மனமும் தணிந்தது
யாரென் சொலினும் கவலை வேண்டாம்
துணிந்துசெல் என்றே உள்மனம் சொன்னது.

பிறரை நினைத்தா *பழனம்* சென்றோம்
லாபம் மட்டுமா மனதில் கண்டோம்
*நுகைதல்* அன்றோ *நொவ்வல்* கொடுக்கும்
இழப்பை நினைத்தேன் உழைப்பை மறந்தோம்
மண்ணும் நீரும் என்றும் துணைக்கும்
காலம் கடந்தும் அதுவே நிலைக்கும்.

தெளிவு பிறந்தது துணிவு வந்தது
நிமிர்ந்து நின்றிட நிலமகள் மகிழ்ந்தனள்.

*கிராத்தூரான்*