Header Ads Widget

Responsive Advertisement

மண்ணும் நெருப்பும்

உங்களின்
எல்லா வினாக்களுக்குமான
விடை
கண்ணீருடன் தானிருக்கிறது
என்னிடம்

அதற்காக
நீங்கள்
விசிறிகளோடு
வருவதை
விரும்பவில்லை நான்

சுபமோ
கலகமோ
அவரவர்களுக்கான
காலம்

ஏதோவோரிடத்தில்
நிறையலாம்
தொடரலாம்

மற்றபடி
பொதுவாய்த்தான்
இருக்கிறது

மண்ணும்
நெருப்பும்

*பொன்.இரவீந்திரன்*