நிரபாதியும் தண்டிக்கப்படலாம்
பொய்சாட்சி இருந்தால்
குற்றவாளியும் தப்பிக்கலாம் தவறு செய்யாதிருந்தால்
மணலைக் கயிராய்த் திரிக்கலாம்
மந்திரவாதியாய் இருந்தால்
யாவருக்கும் அன்னையாகலாம்
அன்னை தெரேசா போல்
அன்பும் கருணையும் இருந்தால்
தெய்வத்தையும் காணலாம்
உண்மையான பக்தி இருந்தால்
மனிததனும் தெயவ்மாகலாம்
மமற்றவரின் பசியைப் போக்கினால்
வாழ்க்கை சொர்க்கமாகும்
நல்ல புரிதல் இருந்தால்
பிறந்த பயனை அடைவர்
தம் குழந்தையின் மழலைச்சொல் கேட்பவர்
அரசனும் ஆண்டியாகலாம்
தவறான ஆட்சி புரிந்தால்
ஆண்டியும் அரசனாகலாம்
நல்ல அதிர்ஷ்டம் இருந்தால்
விதியையும் வெல்லலாம்
மதி இருந்தால்
அனைவருடனும் இருக்கும் தெய்வம்
தாய் தந்தையர்
சில பிள்ளைகள் செய்யும் பாவம்
பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புதல்
வாசமில்லா ரோசா கூட
எதற்கோ பயன்படுகிறது
உன்னை பயனுற வளர்த்த
பெற்றோரை பயனில்லையென்று அனாதையாக்காதே
பெற்றோரின் பாசம் பெரிதா
நம் பாவம் பெரிதாயென்று
அவர்களுடன் போட்டிபோடாதே
தி.பத்மாசினி