இருந்ததை எல்லாம் இழந்து விட்டோமே,
இழந்தபின் இங்கே இருந்தென்ன லாபம்?
நினைப்பவர் இங்கே இருக்கிறார் பலபேர்,
அவர்களுக்காகவே பேசவந்தேன் நான்.
அவ்வளவே தான் முடிவுசெய்தார்கள்,
அரிந்தே தள்ளிச் சென்றுவிட்டார்கள்,
அவர்களே எல்லாம் நினைத்துவிட்டார்கள்,
இறைவன் இருப்பதை
மறந்து விட்டார்கள்.
நான் எழுதிய விதியை மாற்றிவிட அவன் யார்?
முடிந்துவிட்டது என்று
முடிவு செய்ய அவன் யார்?
முளைத்துவா என்றே அருளினார் இறைவன்,
குலைதள்ளி நான் மகிழ தான் மகிழ்ந்தார் இறைவன்.
வாழவேண்டிய நாட்களை வகுத்தவன் அவனே,
வாழவைத்து வேடிக்கை பார்ப்பவன் அவனே,
சாதனைபுரிய வைப்பதும் அவனே,
'எல்லாம் அவன் செயல்' என்ற புரிதலும் நலனே.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*