ஓசோன் படலத்தில் நாம் ஓட்டை போட்டோம்
வெயில் கொளுத்துகிறது
வானத்தில் யார் ஓட்டை போட்டார்கள்
மழை நீர் ஒழுகுகிறது
அந்த மழை நீர்
பன்னீராவதும்
குடிநீராவதும்
கழிவு நீராவதும்
வீணாய் போவதும்
நம் கையில்
மழைநீரை சேமிப்போம்
குடிநீர் தட்டுப்பாட்டை குறைப்போம்
தி.பத்மாசினி