குழந்தையின் பற்கள்
கழுவிய பச்சரிசியோ?
நெருங்கத் தொடுத்த முல்லையோ?
இரட்டைவட
முத்துச்சரமோ?
வெண்சோற்றுப் பருக்கையோ?
நீ உறங்கு!
மண்மடியில் வேர்உறங்கும்!
வேர்மடியில் செடிஉறங்கும்!செடிமடியில் பூஉறங்கும்! பூமடியில் தேன்உறங்கும்!தேன்மடியில் வண்டுறங்கும்!
வண்டுமடியில்
காற்றுறங்கும்!
காற்றுமடியில்
கண்ணே நீஉறங்கு!
த.ஹேமாவதி
கோளூர்