Now Online

Wednesday, 27 March 2019

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரமெனப்  பொய் புனைந்து
சுற்றி வந்தவொன்று

இனிச்
சாம்பலாய்
உதிர்ந்து விழும்
காலம்

சாமானியனுக்கும்
தொடங்கலாம்
சுக்ர திசையாய்

*பொன்.இரவீந்திரன்*


யாசகனாய் நிற்கிறேன்

பெரும் முதலாளியாய்
நிற்கிறாய்
நீ

நானோ
உன் வாசலில் நிற்கிறேன்
யாசகனாய்

*பொன்.இரவீந்திரன்*


Tuesday, 26 March 2019

விழிப்பாய் வீரனே🌹விடிந்த பின்பும்
வெளிச்சம் வரவில்லையே என வாடிநிற்கின்றாயோ?
உன் வீரம் விழுத்தெழுந்தால்
உலகத்தையேகையோடு புரட்டிப்போடலாம்தெரியுமா
கடந்த காலத்தை நீ
நடந்துவந்த பாதையைச்
சற்றேத்திரும்பிப் பார்! நீ
போதித்த விடயங்களைவிட,
சாதித்த விடயங்களைப்
பட்டியலிடு!
நிச்சயம் உன்மதிப்புசுழியமே
கத்தியின்றி ரத்தமின்றி நாம்
பெற்ற சுதந்திரம் இன்று.....
சத்தமின்றி சாகடிக்கப்படுவ
                                       தை
மெத்தனமாய்பார்த்துக்
கொண்டிருப்பானேன்?
நாட்டை உனக்காக வளைப்
                    பதை விடுத்து
நாட்டுக்காக உன்னை வளை
                          —த்நுப்பார்!
வானவில்லின் ஏழு வண்ணத்
                             —தையும்
சுழற்றியடித்து வெள்ளைநிற
                               -த்தை
நிலைநிறுத்தும்ஆதவன்போ
சமூக அவலங்களைச்
சுழற்றியடித்து ஒற்றுமை
எனும் ஒரே நிறத்தை
நிலை நிறுத்துவாய்!
முன்னோர் உன்போல்
சோம்பியிருந்திருந்தால்..,,,,,
பசுமை கொழுத்திருக்குமோ
இந்த பூமி?
அன்றவர்கள்சிந்தியவியர்வை
இன்று வயல்களில் பயிராய்!

பூமிக்குள் புதையலாய்!
சாமிக்கு சப்பரமாய்
சூரியனையே எழுப்பிய
சாதனைச்சேவல்களாய்!
ஆதவனையே தொடுவதற்கு
ஆர்த்தெழுந்த அனுமனாய்!இன்னமும் பொங்கிக்
கொண்டேதானிருக்கின்றன
இது தெரிந்தும் கூட ஏன்
இந்த மௌனம்?
சுதந்திரபூமியை மழைநீரால்
குளிர்வித்த காலங்கள்போய்
புத்தன் பிறந்த பூமியை
ரத்த ஆறுகள் நனைத்து
நிற்கும் அவலம் ஏனென்று
சிந்தித்தாயா?
சாதீய போர்வைக்குள்
சமூகத்தை போர்த்தியவரை
சாவகாசமாய் காணவோ?
இன்று போய் நாளை வா
என்றவனின் புண்ணியபூமியில் இனியென்றும் இரக்கத்தின்
விதைகள் முளைக்கப்போவதுஇல்லை
எனும் நம்பிக்கையின்மையா
சாதிகளும் சமயங்களும்
சம்மணமிட்டு அமர்ந்து
சரிக்குச்சரியாய் தேசத்தை
நுனிப்புல்லாய் மேய்ந்து பின்
நேசத்தைப் புதைகுழிக்குள்
தள்ளுகின்ற காட்சிப்பார்.....
சித்தபிரமை பீடித்த நம் தேசத்தின் அழுக்கான
பித்தத்தைதெளிவித்துச்
சுத்தமாக்கலாம் வா!
கனவில்கூட தேசத்தின் நலனை நினையாத அரசியல்
துரியோதனர்களை
அடித்து நொறுக்கும்
காண்டீபம் ஏந்தி விஜயனாய்
நீ வந்தால்..............,
நாடே உனக்கு சாரதியாய்
மாறி நிற்கும்!!!!!!!!!!!
என் வீரனே!
விழித்தெழுந்து வா !

🌹🌹வத்சலா🌹🌹


தண்ணீரே தண்ணீரே தாகம் தீர்க்கும் தண்ணீரே..


அதிகாலையில்
எழுந்து
ஆலயம்
தொழுவதை
விட..

நாம்
அதிகாலையில்
அங்கத்தை
தண்ணீரால்  தொழுவோமே..

உடல்
முழுவதும்
ஆரோக்கியத்தை
பேணுவோமே..

தண்ணீரால்
அகத்தை
குளிர வைத்தால்
புறத்தை ஔிர
வைக்கும்..

உடல்
முழுவதும் புத்துணர்ச்சியை
உண்டாக்கும்..

உடல்
உறுப்புகளைச்
சீராக்கும்
நச்சுக்களை
வேர்
அறுக்கும்..

உடலும்
பொழிவோடும்
வாழ்வோம்
தெளிவோடும்..

கண்ணீர் விடாமல்
வாழ
உடலுக்கு
தண்ணீர் விட்டு
வாழ்வோமே..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


வெண்ணிலவே, வெண்ணிலவே,,,,உயரத்தில் நீ இருக்க உன் அருமை தெரியலையே,,,,
தெருவிலே நானிருக்கேன் என்னைப் பார்த்து ஏங்குவதேன்,,,,
கடமையில் உன்னைப்போல் யாருண்டு,
காலத்தில் வெல்வதிலும்
உனக்குப் பேருண்டு,,,
உரிமைக்கு குரல் கொடுத்தாய் நீ நின்று,,,
அந்த நினைவுகளை மறப்பேனா நான் இன்று,,,,
இரவானால் என்னை வந்து பார்க்கின்றாய்,,,
மனதுக்குள் ஏதேதோ கேட்கின்றாய்,,,
உலகாளும் உனக்கு நிகர் நானேது,,,
அந்த உண்மை சொல்லி விடு மறவாது,,,
மேகங்கள் மறைத்தாலும் சோர்வுனக்கு
ஆகாது,
போர் தொடுக்கும்
உன் மனதும் என்னைப் பார்க்காமல் போகாது,,,,
நீ வளர நான் பார்க்க,
நில மகளும் வரவேற்க
தாமரையை காண்பது போல் தலை சாய்த்து போவதேன் வெண்ணிலவே,,,
தேன்மணக்கும் தமிழெடுத்து
தென்றலால் பூதொடுத்து,
வான் முழுக்கு வீசிடுவேன் வெண்ணிலவே,,,
உன் வட்ட முகம் காண்பதற்கே வெண்ணிலவே!

பாலா


ஆனால்             
கடல்முழுக்க கயல்கள் உண்டு
ஆனால்
உன்விழிகளில்
உள்ள அழகும் துள்ளலும்
எந்த கயலுக்குண்டு?
நிலவுக்குப் பதினாறு பிறைகளுண்டு!
ஆனால்
பெண்ணே உன்
நெற்றியைப் போல்
வசீகரம்
எந்த பிறைக்குண்டு!
பூக்கின்ற பூக்களிலே தேன்சுரக்கும்!
ஆனால்
கண்ணே உன் செவ்விதழில் ஊறுக்கன்ற தித்திப்பின் சுவை
எத்தேனுக்குண்டு?
பவளமென்றாலே
சிவப்புதான்!
ஆனால்
உன்உதடுகள் கொண்ட ஒளிவீசும்
சிவப்பு எப்பவளத்திற்குண்டு?
கோடிக்கணக்கிலே
விண்மீன்கள்
வான்முழுவதும்
கொட்டிக் கிடக்கிறது!
ஆனால்
உன் புன்னகையைப் போல பொலிவு எந்த விண்மீனுக்குண்டு?
எட்டாத தொலைவில்
வட்டநிலா காய்கிறது!
ஆனால்
கிட்டத்தில் ஒளிரும் உன்முகம் போல்
அழகு அதற்குண்டா?
ஆயிரம் இசைக்கருவிகள்
பூமியில் உண்டு!
ஆனாலும்
உன் பேச்சின் இன்பம் எந்த இசைக்கருவிக்கு உண்டு?
அன்னங்கள் அழிந்ததென்று வரலாறு சொல்கிறது!
ஆனால்
பெண்ணே உன் நடையைக் கண்டவர்கள் வரலாறு பொய்யென்று வாதிடுகிறார்கள்!
எத்தனையோ பெண்களை இறைவன் படைத்தான்!ஆனால்
உன்னைப் போல்
பேரழகு எப்பெண்ணுக்குண்டு?

த.ஹேமாவதி
கோளூர்


சிற்பியின் வியப்பு


பெண்ணே
கல்லைச் சிலையாக்க கையிலெடுப்பேன் உளியை!
சொல்லைக் கவியாக்க
உன்விழிமுனையே
உளியாக உதவுகிறது!
என்ன விந்தையிது!
உளியோ உன்னிடம்!
சொல்லால் கவிவடிப்பதோ நான்!

த.ஹே
கோளூர்


தூரிகைத் தூறல் அனில் குமார்மாலை நேர வேளையிலே மனம் கவர்ந்த காட்சியாக
மேலைக்கடல் ஓரமாய் மெய்சிலிர்க்க வைக்கிறது
எண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணவண்ணக் கலவையில் கண்ணைக் கவர்ந்து நின்ற ஆதவனின் ஒளிச்சிதறல்.

நீலத்திரைக்கடல் ஓரத்திலோர் ஓவியமாய்
வானத்து தாரகையை வரவிடாதோர் ஓவியமாய்
நிலமகளின் பசுமைதனை மின்னவைத்தோர் ஓவியமாய்
கதிரவனின் கிரணங்களின் கலக்கலான ஓவியங்கள்.

காதலர்கள் மனங்கவர்ந்த மாலை நேர வேளைதனில்
கவிஞர்களின்  கற்பனையைக் கவர்ந்திழுத்த ஓவியமாய்
கண்குளிர மனம்குளிர கருத்தைக் கவர்ந்திழுத்த
ஓவியனாம் சூரியனின் தூரிகைத் தூறல்கள்.
 
மனம் குளிரவைத்தது இரவிவர்மன் தூரிகை
வியந்து பார்க்கவைத்தது டாவின்சியின் தூரிகை
மலைத்து நிற்கவைத்தது மாருதியின் தூரிகை
ஜெயகோஷம் போடவைத்த ஜெயராஜின் தூரிகை
மனம் திறக்க வைத்தது ம.செ. வின் தூரிகை
லயிக்கச் செய்தது லதாவின் தூரிகை
அசரவைத்தது அரஸ்ஸின் தூரிகை
கண்முன்னே கலையழகாய்
இன்னமும் இன்னமும் தூரிகைத் தூறல்கள் தூண்டுதல்களாக.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


தூரிகைத் தூறல்காற்றென்றத் தூரிகையின் சில்லென்ற தூறலாய் இளந்தென்றல் வீசும்!அதனாலே
தேகங்கள் குளிர அகங்களும் மகிழும்!

இளஞாயிறும் தூரிகையாய் மாறி
தன்கிரணங்களால்
மழலைவெப்பத்தைத்
தூறலாய்ச் சிந்தும்!
அவ்வெள்ளொளி வெளிச்சத்தால் இவ்வையகமே ஏழ்வண்ணம் பெற்று வானவில் சித்திரமாய்த் திகழும்!

ஆழ்கடலும் சும்மாயிராமல்
இரைச்சலோடு
தன்அலையென்ற தூரிகைகளால்
மனஞ்சலியாது
நித்தமும் கரைமோதி காண்பவர்கருத்தை கொள்ளைகொள்ளும் வண்ணம்
அழகான கடற்கரை என்ற சித்திரத்தை எழுதிக் கொண்டேயிருக்கும்!
கருமுகில்கள் யாவும் வானமென்றக் கலைக்கூடத்தில்
கூடும்போதெல்லாம்
தத்தம் தூரிகைகளைச் சிந்திசிந்தித் தூறலாய் மழைச்சிந்தும்!
தேனில் நனைந்தசுகம் தருகின்ற அம்மழையின்பம்
அவரவர் எண்ணத்திற்கேற்ப
எழிலான வண்ணம் கொள்ளும்!

வேர்களென்ற தூரிகைகள் மண்ணென்ற தாளுக்குள் உட்புகுந்துப் போராடி புவியீர்ப்பு விசைக்கு ஏதிராக
மண்ணுக்கு வெளியே வரையும் முப்பரிமாண வண்ண ஓவியங்களே தாவரங்கள்!
பச்சைவண்ண இலைகள் தாலாட்ட பலவண்ண மவர்கள் கொஞ்சல்மொழி பேச
வண்ணக்கலவையைச் சரியான விகிதத்தில் கையாளும் வித்தையை இவ்வேர்கள் எங்குஎவரிடம் எப்படி கற்றனவோ?

காதலிலே கட்டுண்ட
இருவரின் இதயங்கள் தூரிகையாய் மாறி
கணநேரமும் எண்ணமென்ற வண்ணங்களைத் தூறலாக்கி அத்தூறலிலே நாளெல்லாம் நனைந்து மகிழும்!,

தாய்மையென்ற தூரிகை தந்த ஓவியமாம் மழலை என்ற வண்ண ஓவியமே
குடும்பத்தை அழகான வண்ணங்களால்
எழிலூட்டும் தூரிகையாய் மாறுவது விந்தை!
இதனாலே நான் சொல்லுவது யாதெனில் தாய்மையென்ற தூரிகைதான் தூரிகையுள் மிகச்சிறந்த தூரிகை!

த.ஹேமாவதி
கோளூர்


வாசனை

வாசனையோடு
வாழும்
பூக்களெல்லாம்
வசதியோடு வாழ்வதில்லை..

வசதியோடு
வாழும்
பூக்களெல்லாம்
வாசனை இருப்பதில்லை..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


பணம்பணம் மனிதனை மயக்கும் மாய வலை
அதில் சிக்காதோர் யாருளர்?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம்
பணத்தை அளவோடு நேசித்தால் நாம் அதற்கு எஜமான்
அளவுக்கு மீறி நேசித்தால்
அது நமக்கு எஜமான்

பணத்தாசை ஒருவழிப் பாதை
அதில் சென்றால் திரும்ப முடியாது

அதனால் அழிவு நிச்சயம்

பணத்தை நீட்டினால் பரமனும் வரம் தருவான்
அதை வேண்டுவோன் பச்சோந்தியாயும் மாறுவான்

பணம் ஏன் தெரியுமா செல்வந்தர் வீட்டில் இருக்கிறது
அங்கு அதற்கு பாதுகாப்பும் உண்டு
படுக்க இடமும் உண்டு

ஏழை வீட்டிலோ பாதுகாப்பும் இல்லை
படுக்க இடமும் இல்லை

பணத்தைக் கண்டால் பல்லிளிக்கும் மானிடரே
பாசத்திற்கும் கொஞ்சம் பால் வாருங்கள்

தி.பத்மாசினி


Wednesday, 20 March 2019

தமிழன்றோ* இனிதில் முந்தும்!

கடலினிலே அலைகள்தான் துள்ளும்துள்ளும்!
கடலோர நண்டுகளோ மனதை அள்ளும்!
கொடும்பனியைக் கதிரவன்தான் கொல்லும்கொல்லும்
கிள்ளைகளோ நம்பேச்சைத் திருப்பிச் சொல்லும்!
நெடுவாழை பழக்குலையைத் தள்ளும்தள்ளும்!
நீள்விழியர் பேரழகோ மனதைக்  கிள்ளும்!
மடலவிழ்ந்த மலர்கள் தேன் சிந்தும்சிந்தும்!
மொழிகளிலே *தமிழன்றோ* இனிதில் முந்தும்!

த.ஹேமாவதி
கோளூர்
(இது நான் 1996 ல் எழுதிய கவிதை)


மண்பானை - ஹேமாவதி

*மண்பானை*

குயவனின் கண்பட்டு கைபட்டு
பதம்பார்த்து
கால்பட்டு பிசையப்பட்டு
பூவாக மென்மையாக்கப் பட்டு
அச்சாணியில் வைத்து சுழலப்பட்டு
கண்ணும் கருத்தும் கோக்கப் பட்டு
விரல்களால் வனையப்பட்டு
அழகான உருவம் ஆக மாற்றப்பட்டு
சூளையிலே வேகப்பட்டு வண்டியிலே ஏற்றப்பட்டு சந்தையிலே விற்கப்பட்டு என்கைகளிலே வந்துவிட்ட பானையே என்மனதை மகிழவைக்கும் மண்பானையே
உந்தன் ஆதிஅந்தம் சொல்லவோ?
ஆதிமனிதனாம் தமிழனே உருவாக்கினான் முதன்முதல் உன்னை!
செம்பானை கரும்பானை என்று இருவகைகள் உன்னில் உண்டு!
பிறப்பு முதல் இறப்பு வரை பானையே
நீயின்றி எங்கள் வாழ்வுதான் இல்லையே!
பணம்கொட்டி வாங்கிய குளிர்பதனப்பெட்டி தாராத குளிர்ந்த குடிநீரைத் தருகிறாய்!
உன்னுள் ஊற்றிடும்
நீருக்கு உடலை நலமாக்கும் மந்திரத்தைத் தருகின்றாய்!
வேணிற்காலமதில்
மக்களின் காதலை
நிரம்பவே பெறுகிறாய்!
தவித்த வாய்க்கு ஒருகுவளை மண்பானைத் தண்ணீர் என்பது
கொடுத்துவைத்தவர்களுக்கே கிட்டும்!
மேனி முழுக்க ஓட்டை
இருப்பினும் உன்னுள் கொட்டிய நீரினை எளிதில் சிந்துவதில்லை!
தமிழனின் பண்பாட்டை எளிதில் பானை சொல்லும்!
பழமொழி தன்னிலும் பானை வலம் வரும்!
*மாமியார் உடைத்தால் மண்பானை!மருமகள் உடைத்தால் தங்கப்பானை!*
கடையில் இருக்கும்வரைதான்
நீ மண்பானை!
வீட்டிற்கு வந்த பிறகோ நீ
தண்ணீர்ப் பானை!
பால் பானை!
தயிர்ப்பானை!
மோர்ப் பானை!
வெண்ணெய்ப் பானை!
நெய்ப் பானை!
அரிசிப் பானை!
வெல்லப் பானை!
புளிப் பானை!
சோற்றுப் பானை!
குழம்புப் பானை!
ஊறுகாய்ப் பானை!
உப்புப் பானை!
அம்மாடி!
பெண்ணைப் போல உனக்கும்தான்
எத்தனை பெயர்கள்!
ஏழைகள்வீட்டில் இயல்பாக இருக்கும் மண்பானைகள் செல்வந்தர் வீடுகளில் ஆச்சரியமாய் இருக்கும்!
அகழ்வாராய்ச்சியில்
கிடைத்திடும் உனது மூதாதையர்களின்
மேனியின் உடைந்த ஓடுகளில்தான்
எத்துணை பண்பாடுகளை எங்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறாய்!
உடைந்த பானை ஒட்டாததுதான் ஆனால் பானையே
உந்தன் நினைவுகள் எங்கள் மனதோடு என்றுமே ஓட்டிக்கொண்டும் தொட்டுக்கொண்டும்
உறவாடிக் கொண்டேயிருக்கும்!

த.ஹேமாவதி
கோளூர்


மண்பானை - அனில் குமார்

*மண்பானை*

வெளியில் நின்று வருபவர்கள் கால் கழுவி அனல் தணித்து
சுத்தமுடன்  குளிர்ச்சியுடன் உள்நுழைய உதவி நிற்கும்
வாசலிலே வாஞ்சையுடன் ஏழை வீட்டில் மண்பானை.

வீட்டிற்குள் நுழைந்த உடன் வெட்டிவேர் வாசத்துடன்
உடல் குளிர மனம் குளிர தண்ணீரைக் குடிக்கவைத்து
அடக்கமுடன் அமர்ந்திருக்கும் ஓரத்தில் மண்பானை.

உலைகொதித்து மணம்பரப்பி உண்ணவா ஓடிவா என்று ஆசை காட்டி ஆவல் கூட்டி பாசத்தைக் காட்டிநிற்கும்
பண்பதனை இழக்காத பாட்டி கால மண்பானை.

சூடதனைத் தான் தாங்கி தணுப்பதனை உள்வாங்கி
மடியினிலே கஞ்சி தாங்கி அதனையும் குளிர்ச்சியாக்கி
உறியினிலே ஆடி நிற்கும்  மகிழ்ச்சியுடன் மண்பானை.

புறமெங்கும் கரியாக உள் பாகம் சரியாக உழைப்பவனின் உன்னதத்தை எடுத்துக்காட்டி உணர்த்தி நிற்கும் 
மண்ணுக்கு உயிர்தந்து குயவன் செய்த மண்பானை.

மேலிருக்கும் சட்டிகளைக் கீழிருந்து தாங்கி நின்று
பிள்ளைகளைத் தாங்கி நிற்கும் தாயவளை நினைக்கவைத்து
தாய்ப் பானை ஆகிவிடும் தாய்போன்ற மண்பானை.

உடைந்து சிதறிப் போனபின்னும் உருப்படாமல் போகவில்லை
ஓடாகத் தேய்ந்தபின்னும் உதவியாய்நான் உடன்வருவேன்
என்று பாண்டி ஓடாய் மாறிவிடும் தியாகியான மண்பானை.

உண்பதற்கும் குடிப்பதற்கும் காப்பதற்கும் களிப்பதற்கும்
உடனிருந்து உதவிசெய்து வளர்ந்துவிட்ட பின்னாலே
மறக்கப்பட்ட மனிதர் போலே  மறக்கத்தெரிந்த மனிதராலே
மறக்கப்பட்டு மறைந்து போன மற்றோர் பொருள் மண்பானை.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


Tuesday, 19 March 2019

தோழனின் கண்ணோட்டத்தில் தோழி*

*           
————————————
கைக்கெட்டும் தூரத்தில் கண்ணயர்ந்து தூங்குகிறாய்
என்மீதுள்ள நம்பிக்கையால்!
காற்றில் கலைந்த உனது
துப்பட்டாவை சரிசெய்யும்
என் கண்களில்காமமில்லை!
மழையில்.  நனைந்து
மண்சாலையில்கைகோர்த்து
நடக்கும் தோழியே.....
உன் உடல் மொழியில்
எனக்கு காதல் என்றுமே
துளிர்த்ததே இல்லை!
துக்கங்களால் நான்
துவளும் வேளைகளில் என்
தலைகோதி ஆறுதல் சொல்லும் உன் முகத்தில்
தாய்மையை மட்டுமே நான்
உணர்ந்ததுண்டு........!
முகம் பார்த்தே என்
படிக்கும்போதெல்லாம்.....
என் சகோதரியை மட்டுமே
கண்டதும் உண்டு......!
தோல்விகள் துரத்தியபோது
தோள்பிடித்தே தைரியம்
சொல்கையில் தோழனாய்...
அவதாரமெடுக்கும் நீ
என் உடன்பிறந்தாளில்லை!
மழலையாய் மடி சாய்வதால்
நீ என் காதலியும் இல்லை!
எந்நேரமும் என் நலம்
மட்டுமே யோசிப்பதால்........
நீ என் மனைவியும் இல்லை!
உன்முந்தானைஎன் சோகம்
துடைக்கத்தானே தவிரநான்
துயில் கொள்வதற்கு அல்ல!
ஏனெனில் ...நீ எனது தோழி!
பாரதியின் கண்ணம்மாபோல.........!
எனக்கும் நீயே
*யாதுமாகி நின்றவள்*

🌹🌹வத்சலா🌹🌹


மண் பானைஆத்தோரம்
தென்னை மரம்,
தேடிப்பார்த்தேன் வயலோரம்,
ஏற்றச் சத்தம் கேக்குதடி,,,
எங்க மச்சான்
நீ இருக்க,
நாம
ரெண்டு பேரும் சேர்ந்திறைக்க,,,
தண்ணீர்
ரெண்டு பேரும்
சேர்ந்திரைக்க,,,

சேறோடு போராடும்
சீமைத் துரை
அவர் பெயரு
சீமைக்கு போகையிலே
சேர்ந்து நானும் போகப் போறேன்,,,
ஊரோடு பேர் வாங்கி
நாங்க
ஒத்துமையா வாழப்போறோம்
நாங்க
ஒத்துமையா
வாழப்போறோம்,,,

விளைஞ்ச
நெல் கதிர் அறுத்து,
விடியுமுன்னே சூடடிச்சு,
ரெட்ட மாட்டு வண்டியிலே
நெல்லேற்றி,
பட்டணந்தான் போகப் போறோம்
நாங்க
படம் பார்க்க
பட்டணந்தான்
போகப் போறோம்,,,

சந்தைப் பக்கம் போகையிலே மஞ்ச மிளகாய் வாங்கிப்புட்டு
அடுக்குப்
பானை
மண் பானை
அதுல ஆறு வாங்கிட்டு
வெள்ளரிக்க வாங்க சொல்லி வேலாயி
சொல்லி விட
எல்லாத்தையும் வாங்கிப் புட்டோம்
நாங்க
சந்தையிலே
எல்லாத்தையும்
வாங்கிப் புட்டோம்,,,

புதுப்பானை
வந்து விட்டால் பொழிவாகும் வீடெல்லாம்,,,
சுத்தி வர நின்னு பாக்கும்
நம்ம ஊரு ஜனமெல்லாம்,,,
புத்தம் புது பானையத்தான் பூசிடுவோம் தரையோடு,
மூடி ஒன்னு
போட்டிடுவோம் இல்லாமல் குறையோடு,,,

இத்தனை மேல ஒன்னு நெஞ்சுக்குள்ள இருக்கு மச்சான்,,,
நெனப்பிருந்தால்
மனசுக்குள்ளே நீயே வந்து சொல்லு மச்சான்,,,
சத்தியமா லவுக்கை (ரவிக்கை) ஒன்னு
வாங்கித் தாரேனு சொன்னியே,,,
சமயத்துல கேட்டுப் புட்டேன்
அதை மனசுக்குள்ளே
எண்ணியே,,,
மச்சான்
மனசுக்குள்ளே எண்ணியே,,,,,

பாலா


மலரும் நினைவுகள்

தளர்ந்து விட்ட
கால்களும் தேய்ந்து
போன
காலணியும்
பல கதைகள்
பேசும்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


பாட்டு

                

தாலாட்டு பாட நானுனக்கு தாயுமில்லை

தோளில் சுமக்க தந்தையுமில்லை

கைப்பிடித்துச் செல்ல தமக்கையும் இல்லை

அரவணைத்துச் செல்ல அண்ணனும் இல்லை

உன் நோய் தீர்க்கும் மமருத்துவனும் இல்லை

நீ தலை சாய்க்கும் தோழனுமல்ல

உனக்கு ஆறுதல் கூறும் தோழியுமல்ல

உன்னை பகைக்கும்  பகைவனும் அல்ல

உன்னை நேசிக்கும் நண்பனுமல்ல

நான் வீரனுமல்ல
நான் விவேகியுமல்ல
நான் பொறாமைக்காரனும் இல் லை
நான் போட்டிக்காரனும் இல்லை
நான் குழந்தையுமல்ல
நான் குமரியுமல்ல
நான் முதிர் கன்னியும் இல்லை
நான் முடியாதவளும் இல்லை


நான் மிக மிக மூத்தவள்


என்னை நேசிப்பவர் யாராயிருந்தாலும்
தன்னை மறந்து மெய் மறந்து
பகைமை மறந்து
இன்பத்தில் மூழ்கிடுவார்

தி.பத்மாசினி


சொல்நேரிலே சொல்லும் சொல் ஒரு பொருள் உணர்த்த,
அலைபேசியில் பேசும் சொல் மறுபொருள் உணர்த்த,
எழுத்திலே வடித்த சொல் இரு பொருள் உணர்த்த,
சொல்லுக்குப் பொருளா?
சொல்லும் தளத்துக்குப் பொருளா?
சிந்திக்க வைக்கிறது நாம் சொல்லும் ஒரு சொல்.

உம்மென்று சொன்ன சொல் ஒரு எண்ணம் கொடுக்க,
சிரிப்புடன் சொன்ன சொல் மறு எண்ணம் கொடுக்க,
அழுத்தமாய் சொன்ன சொல் இரு எண்ணம் கொடுக்க,
சொல்லுக்குப் பொருளா?
சொல்லும் விதத்துக்குப் பொருளா?
ஆய்வு செய்யவைக்கிறது நாம் சொல்லும் ஒரு சொல்.

மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கையில் ஒரு புரிதல்,
கோபத்தின் உச்சியிலே தகிக்கையில் ஒரு புரிதல்
சாந்தமாய் நினைக்கையில் அளிக்கிறது மறுபுரிதல்
சொல்லுக்குப் பொருளா?
புரிவோர் மனநிலைக்குப் பொருளா?
வருத்தத்தை அளிக்கிறது பல நேரம் ஒரு சொல்.

ஒன்றுமட்டும் சொல்வேன் அதும் உறுதியாகச் சொல்வேன்
கல்லிலே கலைவண்ணம் கண்டார் சிலபேர்,
சொல்லிலே பல எண்ணம் கொண்டார் பலபேர்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


பொடிக்கவிதைகள்

*காற்றின் தெற்கு*

அவள் எந்த திசையில் இருந்தாலும் காற்றுக்கு அதுதான் தெற்கு திசை!
ஏனெனில் அவள்மீது
மோதும்போதெல்லாம்
காற்று தென்றலாய்
மாறுவதால்!
தென்றல் தெற்கிலன்றோ பிறக்கும்!
*தத்துப் பிள்ளை*

என்னில்
வெறும் இலைகள் மட்டுமே!
பூவுமில்லை! காயுமில்லை!
எனக்குமட்டும்
தாய்மைப்பேறு மறுக்கப் பட்டதோ?
என்று வெற்றிலைக் கொடிகள் வாதிட்டன இறைவனிடம்!
பதிலுக்கு இறைவன் ஓங்கிவளர்ந்த பாக்குமரங்களைச் சுட்டிக்காட்டி கலங்காதே அவை ஈனும் பாக்குகளெல்லாம்
உங்களுக்கே தத்துப்பிள்ளைகளாக
உங்கள்மடி மீது வந்து அமரும் என்றான்.

*மருதானியின் பகைவன்*

அன்பே
என்றிலிருந்து நாம் காதலில் வீழ்ந்தோமோ அன்றிலிருந்தே நான் மருதாணியின் பகைவனாகி விட்டேன்!
காரணம் என்னைக் கண்டதும் நாணத்தால் உன்முகம் சிவக்குமே அந்த செம்மை அவைதரும் செம்மையை விஞ்சி இருக்கிறதாம்!

*த.ஹேமாவதி
*கோளூர்*


Sunday, 17 March 2019

உலை

நெருப்பில் குளிக்கிறது
பறை
இனி ஊரெங்கும்
கொதிக்கும்
உலை

*பொன்.இரவீந்திரன்*


கைமேல்  பலன்.

                    """"""   """"""   """"""""

இறப்பு ஒரு இறப்பல்ல
நிரந்தர. இடமாற்றத்தின்
இறுதி கட்ட பயணம் .. 
  இறப்பு
  ஒரு இழப்பல்ல
  உருபெற்ற இடத்திற்க்கே
  உடை பட்டு செல்கிறது...
  மீண்டும்  உருபெற.,.!

மண்ணை
மண்ணோடு கலந்து
மரு சுழற்சி  
செயல்முறை..

    இந்த உலகம்
    மிகப் பெறிய
    சந்திப்பு நிலையம்..
 உயிர்களின்
 போக்கு வரத்து
இங்குதான் சரியாக
சரி செய்யப் படுகிறது,.

       வாழ்ந்த போது
       பயணித்த
       பயணச்சீட்டுக்கு
       இங்குதான் இருதியாக
       பரிசோதிக்கப்  படுகிறது...

 கொலையா..
 தற்கொலையா..
 கொள்ளையா..       அடுத்தவனை
 ஏமாற்றினாயா...?
 இறைவனை மறந்து...
 இன்பமாய் இருந்தாயா..?

         வாழும் போது
         மீறிய விதிமுறைக்கு
         கட்டாய தண்டனை
         கைமேல்  பலன்..
   தப்பிக்க முடியாது..
   தயவு தாட்சன்யம் கிடையாது..

   ஏன் தெரியுமா...?  உன்
   கட்டுப்பாட்டு அதிகாரி..
   இறைவனாய்       இருப்பதால்...!                         

     அப்துல் முத்தலிப்                                  
நெய்வேலி..


  


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS